உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை! விவரம்!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடலோர பகுதிகளையொட்டிய வங்க கடல பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மணடலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 10, 2022
5 மாவட்டங்களில் கனமழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/h8VrmWH3gT
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 10, 2022
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10/09/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/omsSmcXBU0
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 10, 2022
Past 24 hrs Realised Rainfall (mm) over TamilNadu pic.twitter.com/EFO79PKJqx
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 10, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 10, 2022