மேலும் அறிய

ஒரு குழந்தையின் உயிரை காக்க போராடும் ஒட்டுமொத்த கிராமம் ! நெகிழ்ச்சி பதிவு !

அந்த சமயத்தில்தான் தனது  ஒரே மகன்  இவான், ஒன்றரை வயதாகியும் நடக்காமல் இருக்கிறாரே என கவலையில் ஆழ்ந்துள்ளார்.

ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற ஒட்டுமொத்த கிராமமும் ஒருங்கிணைந்து போராடும் சம்பம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி :

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பலேரி கிராமத்தைச் சேர்ந்த கல்லுள்ளத்தில் நௌஃபல். துபாயில் வேலை செய்துக்கொண்டிருந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவால் வேலை இழந்து வீடு திரும்பினார். அந்த சமயத்தில்தான் தனது  ஒரே மகன்  இவான், ஒன்றரை வயதாகியும் நடக்காமல் இருக்கிறாரே என கவலையில் ஆழ்ந்துள்ளார். மருத்துவரை அனுகிய போதுதான் சிறுவன் ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த நோய் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால்  உண்டாகும் நரம்புத்தசைக் கோளாறு. இதனால் குழந்தையின் தசை பலவீனமாகும் இதனால் பேசுதல், நடப்பது, விழுங்குதல் மற்றும் சுவாசிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது.இந்த நோய்க்கான சிகிச்சைக்கு  18 கோடி ரூபாய் செலவாகும். இதில், 9.5 கோடி ரூபாயை ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும், மீதமுள்ள தொகையை செலுத்த குடும்பத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது.

ஒரு குழந்தையின் உயிரை காக்க  போராடும் ஒட்டுமொத்த கிராமம் ! நெகிழ்ச்சி பதிவு !

இணைந்த கிராமங்கள் :

ஏற்கனவே பொருளாதார பிரச்சினையை எதிர்க்கொண்டு வரும் நௌஃபலுக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது சவாலான விஷயம்தான் . இதனால் தனது சொந்த கிரமா மக்களிடன் உதவி கேட்டிருக்கிறார் நௌஃபல். நௌஃபல் தனது கிராமத்தின் உதவியை நாடியபோது, ​​அவர்கள் உடனடியாக மருத்துவ நிதிக் குழுவை உருவாக்கி, நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். 15 துணைக் குழுக்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், வீடுகள், கடைகள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டுமொத்த கிரமாமும் ஒரு குழந்தைக்காக நிதி திரட்டி வருகிறது. குட்டியாடி, கடியங்காடு பந்திரிக்கரை, பெரம்பிரா, நாதாபுரம், மேப்பையூர் உள்ளிட்ட அருகிலுள்ள நகரங்களைச் சேர்ந்த மக்கள் சாதி, வகுப்பு, மத, பாலின வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து பல்வேறு வழிகளில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நிதி திரட்டினர். இதுவரை ஈவான் நிதிக் குழு 8.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் வாரத்தில் ரூ.1 கோடி வசூல் செய்தால் குழந்தை இவானின் சிகிச்சைக்கான முதற்கட்ட தொகையை செலுத்திவிடலாம் என பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒரு குழந்தையின் உயிரை காக்க  போராடும் ஒட்டுமொத்த கிராமம் ! நெகிழ்ச்சி பதிவு !

ஆதரவு கரம் நீட்டும் தன்னார்வலர்கள் :

குழந்தையின் உயிரை காக்க சில இளைஞர்கள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டியுள்ளனர். ஒரு குழந்தையின் உயிரை காக்க போராடும்  தன்னார்வலர்களுக்கு , சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் இணைந்து உணவுகள் சமைத்து கொடுத்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget