மேலும் அறிய
8 AM Headlines: காலை 8 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது இதுதான்..!
8 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- புதிய வகை கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
- தூத்துக்குடி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்
- ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
- காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது ஒரு கம்பனி, அவரால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது என மிகக் கடுமையாக ஜெயக்குமார் சாடியுள்ளார்.
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, எண்ணூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்தியா:
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைஅமியில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
- புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
- டெல்லியில் 24% பேரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர் என்றும் பிஎப்.7 வகை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம் என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
- கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
உலகம்:
- சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ரஷ்யா-உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.
- ரஷ்யாவிடம் ஒரு போதும் சரணடைய மாட்டோம் என உக்ரேன் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
- ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
- தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
- செவ்வாய் கோளில் முதன்முறையாக நிலநடுக்கம் பற்றிய ஆய்வு பணிக்காக சென்ற இன்சைட் விண்கலம், என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என செய்தி அனுப்பியுள்ளது.
விளையாட்டு:
- ஃபிபா உலகக் கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸியை கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி தங்கள் 1,000 ரூபாய் நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படத்தை வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தியாவிற்கு எதிரான டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
- ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெறுகிறது.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion