India 75: அஞ்சாமல் அரசை கேலிச் சித்திரங்கள் மூலம் விமர்சித்த கார்டூனிஸ்ட்டுகள்
கேலிச் சித்திரங்கள் மூலம் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கங்களை கார்ட்டூனிஸ்ட்டுகள் ஏற்படுத்துகின்றனர்.
யாருக்கும், எவருக்கும் அஞ்சாமல் அரசை கேலிச் சித்தரங்கள் வழியாக விமர்சனம் செய்த கார்ட்டூனிஸ்ட்டுகளை தெரிந்து கொள்வோம்
சங்கர் பிள்ளை
இந்தியாவில் "அரசியல் கேலிச் சித்திரத்தின் தந்தை" என்று பிரபலமாக அறியப்பட்ட சங்கர் பிள்ளை 1930 களில் ஒரு கார்ட்டூனிஸ்டாக பணியாற்றத் தொடங்கினார். அவரது படைப்புகளில் அரசியல் தலைவர்களை இந்தியாவின் வைஸ்ராய்களுக்கு நையாண்டி கேலிச்சித்திரம் செய்வது, குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் உள்ளிட்டவைகள் அடங்கியிருந்தது. அவரது வாராந்திர வெளியீடான "சங்கர்ஸ் வீக்லி" என்ற பெயரில் அப்போதைய இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு குறித்தும் வெளியிட்டு வந்தார். அவசர நிலைப் பிரகடனத்திற்கு பின்னர் மூடப்பட்ட அவரது வார இதழில், அவர் எழுதிய நூல்களில் ஒன்று, அச்சமயம் பிரதமராக இருந்த இந்திரா காந்தியைப் பற்றிய கேலி சித்திரத்தை காட்டுகிறது.
ஆர்.கே.லக்ஷ்மண்
இந்தியாவில், கார்ட்டூனிஸ்ட் பத்திரிக்கையாளரான ஆர்.கே.லக்ஷ்மண், சாமானிய மனிதனை தொடர்பு படுத்தக் கூடிய கார்ட்டூன்களால் மிகவும் பிரபலமடைந்தார்.. ஆர்.கே. லக்ஷ்மண், தனது சுயசரிதையான தி டன்னல் ஆஃப் டைம் என்ற நூலில், தனது ஜன்னலுக்கு வெளியே அவர் காணும் பொருட்களைப் போல, உலர்ந்த கிளைகள் முதல் பல்லி போன்ற உயிரினங்கள் மற்றும் காகங்கள் வரை வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை கவனிப்பதன் மூலம் எவ்வாறு உத்வேகம் பெற்றார் என்பதை குறிப்பிடுகிறார்.
அவரின் எண்ணற்ற படைப்புகள் இருந்தாலும், ஏழைகள் மற்றும் சமூக பிரச்னைகள் குறித்த அவரது கார்ட்டூன்கள் மிகவும் வீரியமிக்கவையாக பார்க்கப்பட்டது. 90-களின் முற்பகுதியில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் குறித்த அவரது கார்ட்டூன் பலராலும் பேசப்பட்டது.
அபு ஆபிரகாம்
அபு ஆபிரகாம் பெரும்பாலும் இந்தியாவில் 70 களின் அவசர நிலை பிரகடன காலத்தில், வெளியிட்ட கார்டூன்கள் மூலம் அறியப்படுகிறார். பெரும்பாலான கார்டூனிஸ்ட்கள் தங்கள் அரசியல் கருத்துக்களை சித்தரிப்பதை தவிர்த்த போது, அபு தனது படைப்புகளை வெளியிட சென்றார். அவசர நிலை காலத்தில் அனைத்து வகையான கார்ட்டூன்களும் தணிக்கை செய்யப்பட்டது.
சதீஷ் ஆச்சார்யா
சமகால கார்ட்டூனிஸ்ட்டான சதீஷ் ஆச்சார்யா 21-ஆம் நூற்றாண்டின் அரசியல் குறித்து வெளிப்படுத்து வந்தார். இவர் கேலிச்சித்திரத்தை மிகவும் ஆர்வத்துடனுடம், துணிச்சலுடனும் வெளியிடுகிறார். அவரது படைப்புகள் தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் தி கார்டியன் போன்ற புகழ்பெற்ற வெளியீடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்