மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: காலை 7 மணி தலைப்புச் செய்திகள்.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு
- நாங்கள் மதவாதத்திற்குதான் எதிரி, மதத்திற்கு அல்ல: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு.
- தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் - ஆளுநர் சர்ச்சை பேச்சு. இதனைத் தொடர்ந்து டிவிட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தனர்.
- பாஜகவின் இரண்டாவது தலைவராக இல்லாமல், சனாதனத்தை எதிர்ப்பாரா ஆளுநர் ரவி என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
- சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்; அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!
- சத்துணவில், தேங்காய் பால் வழங்க வேண்டும் - பாஜக ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.
- குறுக்கு வழியில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் பெற்றுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
- ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்று சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் மேல்முறையீட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு இணையான வேறு கட்சி இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு!
- திருவண்ணாமலையில் போலீஸ் கேன்டீனில் திருடிய காவலர் கைது - செல்போன்கள், டிவிக்கள் பறிமுதல்
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா
- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டின் தலைநகர் டெல்லி, ஜம்மு , காஷ்மீர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது
- மதிய உணவு திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிக்கன் மற்றும் பருவ காலத்திற்கு ஏற்ப பழங்களைத் தர மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.
- ராகுல் காந்தியின் ‘ஒற்றுமை பயண’த்தில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரகாஷி தோமர் (Prakashi Tomar) கலந்து கொண்டார்.
- திருமணம் ஆனாலும் ஒரு பெண் தனது தந்தையின் மகளாக தான் இருப்பாள் என, கர்நாடக நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
- ரூ 19,744 கோடி மதிப்பீட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
- உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உலகம்
- காதல் விவகாரத்தில் சகோதரரும் இளவரசருமான வில்லியம்ஸ் தன்னை, சட்டையை பிடித்து அடித்ததாக இளவரசர் ஹாரி தனது சுய சரிதையில் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அமேசானில் ஏறக்குறைய 3,00,000 பணியாளர்கள் இருந்தனர். அதில் 6% கார்ப்பரேட் பணியாளர்கள் (18 ஆயிரம்) இந்த பணிநீக்கம் மூலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
- 3 மனைவிகள் கட்டிய பாகிஸ்தான் நபருக்கு 60வது குழந்தை பிறந்தது. பாகிஸ்தானை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி. 50 வயதான அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விளையாட்டு
- இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
- 2023ஆம் ஆண்டின் ஆசியக் கோப்பையில் மோதவுள்ள இந்தியா- பாகிஸ்தான்.. பங்கேற்குமா இந்தியா? குழப்பத்தில் ரசிகர்கள்!
- ரிஷப் பண்ட்க்கு முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் கிழிந்ததில் இரட்டை அறுவை சிகிச்சை செய்ய உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion