மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஆளுநர் - முதல்வர் சந்திப்பு.. புத்தாண்டு கொண்டாட்ட விதிகள், அறிவுறுத்தல்கள்.. இன்றைய காலை செய்திகளில்..
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- ’கலைஞர் நூற்றாண்டு’ பெயரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் சிறப்பு பாதுகாப்பு - 10 முக்கிய சர்ச், கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடு
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் - திமுக தலைமை கழகம் வேண்டுகோள்
- திருநெல்வேலி, தூத்துக்குடியில் மின் கட்டணத்தை செலுத்த பிப்ரவரி 1 வரை அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - அமைசர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்
- தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- உச்சநீதிமன்ற அறிவிப்பு எதிரொலி: ஆளுநருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுத்தினார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
- கோவையில் இருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியா:
- பஜ்ரங் புனியாவை போலவே, தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் அறிவித்திருந்தார்.
- புத்தாண்டின் முதல் நாளான நாளை ஜனவரி 1ம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
- மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
- இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவை குற்றவாளியாக அறிவித்துள்ளது காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம்.
உலகம்:
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் - நெதன்யாகு அதிர்ச்சி தகவல்.
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு.
- பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்; முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து.
- மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு.
- அமெரிக்க அதிபர் தேர்தல்- மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு ட்ரம்புக்கு தடை.
- இந்தியா- பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி; சீனா கடும் எதிர்ப்பு
விளையாட்டு:
- இலங்கை டி20 அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி - இன்று தொடக்கம். ப்ரோ கபடி லீக் 2023: தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் இன்று பலப்பரீட்சை. ப்ரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
விழுப்புரம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion