மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நடப்புகள்.. இன்றைய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- அதிக கட்டணம் வசூல் செய்ததாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளை விடுவிக்க கோரி கோரிக்கை - இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என கூட்டமைப்பு அறிவிப்பு
- புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று நடைபெறுகிறது - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு - சொத்துகளை அபகரித்த பாஜக பிரமுகருக்கு மூத்த நிர்வாகிகள் உதவுவதாக குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் காந்தியையும் சாதி சங்க தலைவர் ஆக்கியிருப்பார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் சர்ச்சை
- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
- சென்னையில் நிறுத்தங்களின் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் நடைமுறை - மேலும் 1000 பேருந்துகளில் விரிவுப்படுத்தபட உள்ளதாக தகவல்
- தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
- திமுக அரசு மீது பாஜக தேசிய தலைமையிடம் புகார் அளித்த அண்ணாமலை - அக்டோபர் 27 ஆம் தேதி 4 பேர் குழு தமிழகம் வருகை
- தமிழ்நாடு முழுவதும் ஆயுதபூஜையை சிறப்பாக கொண்டாடிய மக்கள் - அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு
- டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமன பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்தியா
- வட இந்தியாவில் களைகட்டிய நவராத்திரி திருவிழா - மக்கள் ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்
- டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
- வாக் பக்ரி நிறுவன இயக்குனர் பராக் தேசாய் தெரு நாய்கள் தாக்கியதில் உயிரிழப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
- மும்பையில் 8 மாடி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு
- கர்நாடகாவில் அனைத்து விதமான தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் விழா நிறைவு
- பெங்களூருவில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை
- பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி பாராட்டு
உலகம்
- வங்கதேசத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 15 பேர் உயிரிழப்பு
- நேபாளத்தின் காத்மண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு
- காஸாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ,
- தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீன ராணுவம் தாக்குதல்
விளையாட்டு
- உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி
- பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தல்
- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவால் மரணம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion