மேலும் அறிய
Advertisement
(Source: Poll of Polls)
7 AM Headlines: இன்று தியானத்தை தொடங்கும் மோடி.. மியான்மரில் மிதமான நிலநடுக்கம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்
- கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடக்க உள்ள மோடி தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மனு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை; இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு
- பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் மோதல் - ஒருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- நான் நலமாக இருக்கிறேன்; பரிபூரண நலத்துடன் மீண்டு வருவேன் - வீடியோ வெளியிட்டு வைகோ விளக்கம்
- பெங்களூரில் இருந்து சேலம் வரை விமானமும், சேலத்தில் இருந்து கொச்சின் செல்லும் விமான சேவை திடீரென ரத்து செய்ததால் விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.
- கத்திரி வெயில் முடிந்தும் நேற்று தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
- குமரியில் பிரதமர் நடத்தும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவமானம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- ரூ. 6.97 கோடி ஜிஎஸ்டி - தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு தடை.
- சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை.
- ஸ்ரீவில்லிபுத்தூர் பேச்சி அம்மன், காட்டழகர் கோயில்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க தடை
இந்தியா:
- 2 மாதங்களுக்கு மேலாக களைகட்டிய மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.
- இருளை எதிர்த்து போராடும் வலிமையை உலகிற்கு தந்த சூரியன் மகாத்மா காந்தி - ராகுல் காந்தி.
- கடும் வெப்ப அலையால் பீகாரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் ஜூன் 8 வரை விடுமுறை அறிவிப்பு.
- கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தை மோடி இன்று தொடங்குகிறார்.
- டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- உ.பி: பாஜக நிர்வாகி பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு.
- மக்களவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பாஜக கூட்டணி வெற்றி பெறாது - கார்கே.
- எனது உடல்நிலை பற்றி கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வதந்தி பரப்பி வருகிறது - நவீன் பட்நாயக்.
- அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் - பிரதமர் மோடி
உலகம்:
- மியான்மர் நாட்டில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.
- பாகிஸ்தான் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் மீண்டும் பதற்றம்.
- சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- ரஃபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுக்கு இடமில்லை - ஹமாஸ்.
- இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டு தூதரை பிரேசில் அதிபர் லூயிஸ் டிசில்வா திரும்ப அழைத்தார்.
- பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு.
விளையாட்டு:
- ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத்தொலை - சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவிப்பு.
- கிரிக்கெட் அணியில் இனப்பிரிவினை விவாதிப்பது வெட்கக்கேடு - டிவில்லியர்ஸ் ஆவேசம்.
- ரோஹித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில், 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.
- 39 வயதான ரொனால்டோ, நடப்பு சவுதி ப்ரோ லீக் சீசனில் 31 போட்டிகளில் விளையாட்டி ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த சாதனையை படைத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தேர்தல் 2024
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion