மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அறிந்திடாத புதிய தகவல்கள்..காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
7 AM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாடு:
- உலக மகளிர் தினம் இன்று கொண்டாட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
- புதுச்சேரியில் பாலியல் வன்புணர்வு முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமி உடல் நல்லடக்கம் - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம் தேதி முதல் நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை திட்டம்
- புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் - நீதி வேண்டி இன்று ஒருநாள் பந்த் அறிவிப்பு
- மக்களவை தேர்தலுக்கான திமுக விருப்பமனு பெறும் அவகாசம் நிறைவு - மார்ச் 10 ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது
- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இலக்கியவாதி பாஸ்டினா சூசைராஜுக்கு அவ்வையார் விருது அறிவிப்பு
- தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணி அறிவிப்பு - மகளிர் தலைமையிலான அணியை அறிவித்தார் விஜய்
- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 10,11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் - அதிமுக அறிவிப்பு
- கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கும் அரசு மத்தியில் தேவை - கொளத்தூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு - 2 வாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடப்பாண்டில் 5வது முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி
- சிவராத்திரி, வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இந்தியா:
- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு
- மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டி 102 வயது மூதாட்டி நடைபயணம்
- காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தேர்தல் ஆணைய கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது
- தேர்தல் பத்திரம் சமர்பிப்பு விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
- பெங்களூருவில் கடும் குடிநீர் பற்றாக்குறை - பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து
- சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்
- பிரதமர் மோடி குறித்து பொதுவெளியில் பேசும்போது எச்சரிக்கையுடன் பேச ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
- இந்தியாவில் முதல் ஏ.ஐ ரோபோ ஆசிரியை - கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டது
உலகம்:
- போருக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
- பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து முதல்முறையாக அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சர்தார் ரமேஷ் சிங் அரோரா
- மெக்ஸிகோவில் ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
- இளம்பெண்ணை பணிக்கு அமர்த்தியதில் ஊழல் - பெரு பிரதமர் ஆல்பர்டோ ராஜினாமா
விளையாட்டு:
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட்; முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து
- இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்களுக்கு எடுத்துள்ளது
- 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் அஸ்வின் - சிறப்பு பரிசு வழங்கி கௌரவிப்பு
- அகில இந்திய பீச் வாலிபால் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
- பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion