மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அதிமுகவுக்கு ட்விஸ்ட் கொடுத்த பாமக.. இன்று சேலம் வருகிறார் பிரதமர்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார்.
- தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 நாளில் தமிழ்நாட்டில் ரூ.2.10 கோடி பறிமுதல்
- பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
- அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸுக்கு நிரந்தர தடை - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகை தொகுதியின் வேட்பாளராக வை.செல்வராஜ்-ம், திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே. சுப்பராயன்-ம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
- இஸ்லாமியர்களை பயமுறுத்தி சிஏஏ ஆயுதத்தை கையில் எடுத்த திமுக கூட்டணி - டிடிவி தினகரன்
- தமிழ்நாடு பா.ஜ.க.வின் அறிவிக்கப்படாத தலைவராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என திமுக எம்.பி வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி இன்று சேலம் வருவதையொட்டி, பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
இந்தியா:
- ஹிமாச்சல் மாநிலத்தில் 6 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரசு அரசாங்கம் நீடிக்கிறது.
- மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
- தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, 6 மாநில உள்துறை செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
- இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார்.
- தேர்தல் பத்திரங்களுக்கான பிரத்யேக எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட, எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடுகிறது.
உலகம்:
- பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல்.
- வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
- ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புதி வெற்றி - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
- அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
- அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானத்தில் இருந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
விளையாட்டு:
- சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல்: ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு.
- இந்திய மல்யுத்த சம்மேளன இடைக்கால கமிட்டி கலைப்பு - ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு.
- வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.
- ஐபிஎல் 2024: கொல்கத்தா அணியின் பயிற்சு முகாமில் இணைய்ந்தார் மிட்செல் ஸ்டார்க்
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு உடற்தகுதி சான்றிதழை பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது.
- மகளிர் பிரீமியர் லீக் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion