மேலும் அறிய
Advertisement
7 AM Headlines:மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை.. ஆரணி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டி.. தற்போதைய நிலவரங்கள்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- அனைத்து அரசு பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
- சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம்
- பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும் - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
- தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சி - மோடிக்கு திமுக கண்டனம்.
- குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்க காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
- முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.
- தமிழ்நாட்டில் மோடி யாரை புகழ்ந்தாலும் பாஜகவுக்கு ஓட்டு கிடையாது - அமைச்சர் ரகுபதி.
- மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது.
- சாந்தன் இறப்புக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே காரணம் - வேல்முருகன் குற்றச்சாட்டு.
- தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் - அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு.
- மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்தியா:
- ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
- ஜார்க்கண்ட்: ஜம்தாராவில் ரயில் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.
- ஒய்.எஸ்.ஆர்.காங். எம்.பி ஸ்ரீனிவாசலு பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்தும் விலகினார்.
- புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்தை கண்டிபிடித்துள்ளதாக டாடா அறிவிப்பு.
- மணிப்பூர் வன்முறையில் இதுவரை 219 பேர் உயிரிழந்திருப்பதாக ஆளுநர் உரையில் தகவல்.
- சட்டவிரோத சுரங்க வழக்கு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன்.
- 2022-23ல் மொத்த கட்சிகளின் வருவாய் ரூ.3077 கோடியில் பாஜக வருவாய் மட்டும் ரூ.2361 கோடி என தகவல்.
- மக்களவை தேர்தலில் கேரளாவில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு.
- நெல்லை அல்வாபோல் இங்குள்ள மக்களும் இனிமையானவர்கள் - பிரதமர் மோடி.
- சண்டிகர் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் பதவியேற்றார்.
உலகம்:
- பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு அமைப்பது தொடர்பாக இன்று ரஷ்யா பேச்சுவார்த்தை.
- பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீபை பரிந்துரை செய்தார் நவாஸ் ஷெரீப்.
- தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் 2 சவால்கள் உள்ளது - ரணில் விக்கிரமசிங்கே.
- பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாண பேரவைக்கு தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
- அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு.
- பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு.
- இஸ்ரேலில் யாரவுன் பகுதியில் ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.
- ஹவுதி கிளர்ச்சி படை தளபதி இப்ராஹிம் நஷிரி மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பு
விளையாட்டு:
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரஜத் பட்டிதரை பிசிசிஐ விடுவிக்க உள்ளதாக தகவல்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-24-க்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரில் இருந்து, விராட் கோலி விலகிய நிலையில் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல்லில் இருந்தும் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion