மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நிகழ்வுகளை அறிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் - சென்னை மெரினாவில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்
- சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சமூகத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
- தொடர் விடுமுறை எதிரொலி - சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
- சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - திருச்சியில் நடந்த விசிக மாநாட்டில் தீர்மானம்
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு - விசிக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளூரை
- உடல்நலக்குறைவால் இலங்கையில் காலமான பாடகி பவதாரிணி உடல் சென்னை வந்தது - ஏராளமான திரைப்பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
- பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட்டது - இளையராஜா பண்ணையில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது
- கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்த மத்திய அரசு - முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
- தமிழ்நாடு முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் அதிமுக தேர்தல் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு
- பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகளுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
இந்தியா:
- டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை
- அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - அயோத்தியில் தரிசனம் நேரம் நீட்டிப்பு
- ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆட்டோ, டிராக்டர் மீது அதிவேகமாக மோதிய கார் - 7 பேர் உயிரிழப்பு
- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே சாலைகள் அமைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
- இந்தியா கூட்டணி மீது அதிருப்தி - மீண்டும் பாஜக கூட்டணி நிதிஷ்குமார் செல்லவுள்ளதாக தகவல்
- கடவுள் படத்தை காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்
உலகம்:
- உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி
- காங்கோவில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு
- ஆஸ்திரேலியாவில் உள்ள பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
- உதவி கோரி காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - 20 பேர் உயிரிழந்ததாக காஸா தகவல்
விளையாட்டு:
- ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது இந்தியா
- தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion