மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: தெரிந்ததும், தெரியாத நிகழ்வுகளும்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு - பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது
- பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
- விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
- பிப்ரவரி 23 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் -நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
- நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் - அதிமுகவில் தொடங்கியது
- தன்னைப் பற்றி சர்ச்சையான கருத்துகளை சொன்ன அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது கருணாஸ் போலீசில் புகார்
- மகளிர் நலனை மேம்படுத்தும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024ஐ வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
- இலங்கைக்கு 2 டன் பீடி இலைகளை கடத்த முயன்றதாக 5 தமிழக மீனவர்கள் கைது
- போராட்டம் எதிரொலியாக கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை - பங்குத்தந்தை தகவல்
- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை - மார்ச் 6 ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை
- திருச்செந்தூர் மாசித் திருவிழா - பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்
- தென் தமிழகத்தில் இன்று இலேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- மக்கள் நீதி மய்யம் 7 ஆம் ஆண்டு விழா - கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தலைவர் கமல் பேச்சு
- நாடாளுமன்ற தேர்தலில் 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி - திருமாவளவன் தகவல்
இந்தியா:
- டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் - போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழப்பு
- விவசாயி உயிரிழப்பு சம்பவம் இதயத்தை நொறுக்கி விட்டதாக ராகுல்காந்தி வேதனை
- கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு
- கர்நாடகாவில் சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து புதிய சட்டம் நிறைவேற்றம்
- நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
- மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
- நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கீடு - அகிலேஷ் யாதவ் தகவல்
- வயது முதிர்வு காரணமாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பாலி நாரிமன் காலமானார்
உலகம்:
- பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு
- எலான் மஸ்கிற்கு நோபல் பரிசு வழங்க நார்வே நாட்டு எம்.பி., கோரிக்கை
- லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 15வது இடத்துக்கு ஜெய்வால் முன்னேற்றம்
- இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி
- ப்ரோ கபடி லீக் தொடரில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி
- மகளிர் பிரிமீயர் லீக் தொடர் - தொடக்கவிழாவில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்பார் என அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion