மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் - உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.
- தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக் கோரி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
- ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கல்விக்காக தானமாக கொடுத்த பூரணம் அம்மாளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
- கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பது போல இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- புதிய சிந்தனையுடன் தொடங்கப்படும் தொழில்களுக்கான உகந்த சூழலை ஏற்படுத்தி தரும் மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா:
- தொடர்ந்து வாட்டிவதைக்கும் கடும் குளிர்: பாட்னாவில் வருகின்ற 20ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கின் விலை, முதல்முறையாக 900 ரூபாயை எட்டியுள்ளது.
- 'உங்கள் மொபைல் போன் உங்களை படித்துக் கொண்டிருக்கிறது' - செயற்கை நுண்ணறிவு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்
- குஜராத் அருகே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு என உ.பி. துணை முதலமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
- விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரம் - இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்
உலகம்:
- ட்ரம்பின் துணை அதிபர் வேட்பாளராக விவேக் ராமசாமி நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
- கனடாவுக்கு படிக்க செல்வதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டு குறைந்துள்ளதாக கனடாவின் உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
- கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது.
- ஈராக், சிரியாவை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு:
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன்மூலம், ரோஹித் சர்மா இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார்.
- இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் முதலாவது சூப்பர் ஓவர் டிரா ஆனதால், இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- மூத்த வீரரான விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான, பிரக்ஞானந்தா தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion