மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் அரசியல் தொடங்கி சர்வதேச விளையாட்டு வரை - காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற அரசு முடிவு
- 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு - நாளை காலை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என கணிப்பு
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உதவிப் பேராசிர்யர்கள் 56 பேர் பணி நீக்கம் - போதிய கல்வித்தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததால் நடவடிக்கை
- திருப்பூரில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் - பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
- ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம்
-
10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச்சில் தொடக்கம்: மே மாதம் முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இந்தியா:
- மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 230 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- சத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 70 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 1.61 கோடி வாக்காளர்கள்
- வரும் 19ம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடி, அகமதாபாத் மைதானத்திற்கு நேரில் வர உள்ளதாக தகவல்
- டெல்லியில் போலி மருத்துவர்களால் பறிபோன உயிர்கள் - பெண் உட்பட 4 பேர் கைது
- ரூ.450 கேஸ் மானியம் வழங்கப்படும் - ராஜஸ்தான் மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக
- சந்திரயான் 3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது - இஸ்ரோ அறிவிப்பு
உலகம்:
- காசாவில் உள்ள அல் -ஷிபா மருத்துவமனையில் கிடைத்த லேப்டாப்பில் பணய கைதிகளின் புகைப்படங்கள் - இஸ்ரேல் தகவல்
- காசாவில் மருத்துவமனைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை - இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் விளக்கம்
- ராக்கெட் வீச்சுக்கு பதிலடி - தெற்கு லெபனான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்
- ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் - சொந்த நாட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தல்
விளையாட்டு:
- உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம் - இறுதிப்போட்டியில் இந்தியா உடன் பலப்பரீட்சை
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரனாய் தோல்வி
- பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்று போட்டி - குவைத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion