மேலும் அறிய

வரலாற்றில் முதன்முறை! புத்தாண்டில் ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?

டெல்லியில் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1ம் தேதி மட்டும் 67 லட்சம் பயணித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் புத்தாண்டில் அதிகளவு மக்கள் பயணித்தது இதுவே முதன்முறை ஆகும்.

நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று டெல்லி. நாட்டின் தலைநகரமான டெல்லியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மக்கள் குடும்பங்களுடன் கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிகவளாகங்கள், திரையரங்குகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.

67.47 லட்சம் மக்கள்:

டெல்லியில் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1ம் தேதி மெட்ரோவில் மட்டும் 67.47 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு இந்தளவு மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி 49.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் 17 லட்சம் மக்கள் அதிகளவில் மக்கள் பயணித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 23.66 லட்சம் மக்கள் டெல்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு 18.07 லட்சம் மக்கள் மட்டுமே மெட்ரோவில் பயணித்துள்ளனர். அந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மெட்ரோவில் பயணித்தோரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக அமைந்தது.

குவிந்த மக்கள்:

கடந்த 2020ம் ஆண்டு டெல்லி மெட்ரோவில் 55.26 லட்சம் மக்கள் புத்தாண்டு தினத்தில் பயணித்தனர். கடந்த 2019ம் ஆண்டு 50.16 லட்சம் மக்கள் பயணித்தனர். கடந்த 6 ஆண்டுகள் தரவுகளின் படி, டெல்லி மெட்ரோவில் முன்னெப்போதும் இல்லாத அளவு புத்தாண்டு தினத்தில் மக்கள் பயணித்துள்ளனர்.

இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக், படேல்சௌக் மற்றும் மத்திய தலைமைச் செயலகங்களில் மக்கள் வரிசை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வௌியில் வரை டிக்கெட் எடுக்க நின்றனர்.

டிசம்பர் 31ம் தேதி:

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் மட்டும் டெல்லியில் மெட்ரோவில் 48.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 55.29 லட்சம் மக்கள் பயணித்ததே கடந்த 6 ஆண்டுகளில் டிசம்பர் 31ம் தேதி அதிகளவு பயணிகள் பயணித்ததே அந்தாண்டு மட்டுமே ஆகும். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 50.67 லட்சம் மக்கள் மெட்ரோவில் டெல்லியில் பயணித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு  டிசம்பர் 31ம் தேதி 18.86 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 27.45 லட்சம் மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 47.40 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரிவாக்கம்! வேகம், கட்டணம், வசதிகள் எப்படி இருக்கும்?
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரிவாக்கம்! வேகம், கட்டணம், வசதிகள் எப்படி இருக்கும்?
Top 10 Headlines: தமிழகம் முதல் இந்தியா வரை… செப்டம்பர் 9-ன் முக்கிய செய்திகள் என்னென்ன?
Top 10 Headlines: தமிழகம் முதல் இந்தியா வரை… செப்டம்பர் 9-ன் முக்கிய செய்திகள் என்னென்ன?
Chennai Bengaluru Expressway: சென்னை–பெங்களூரு பயணிகளுக்கு ஷாக்! விரைவுச் சாலை திறப்பு மேலும் ஓராண்டு தாமதம் – 2028 தான் இலக்கு!
Chennai Bengaluru Expressway: சென்னை–பெங்களூரு பயணிகளுக்கு ஷாக்! விரைவுச் சாலை திறப்பு மேலும் ஓராண்டு தாமதம் – 2028 தான் இலக்கு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
CM Vijay: அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
TVK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்த விஜய்.. அனல் பறக்கும் மோதல்!
Tata Altroz on EMI: வெறும் ரூ.6 லட்சத்தில் பாதுகாப்பான கார்.! டாடா அல்ட்ராஸ லோன்ல வாங்க முன்பணம், EMI என்ன.? பாருங்க
வெறும் ரூ.6 லட்சத்தில் பாதுகாப்பான கார்.! டாடா அல்ட்ராஸ லோன்ல வாங்க முன்பணம், EMI என்ன.? பாருங்க
Hyundai i20 Finance Plan: ரூ.10,000-க்கும் குறைவான EMI.! சூப்பரான ஹூண்டாய் ஐ20 கார லோன்ல வாங்க முன்பணம் எவ்வளவு.? முழு விவரம்
ரூ.10,000-க்கும் குறைவான EMI.! சூப்பரான ஹூண்டாய் ஐ20 கார லோன்ல வாங்க முன்பணம் எவ்வளவு.? முழு விவரம்
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
வசதியோ.. வசதி..! அறிமுகமாகியது புதிய Creta, Alcazar & Creta EV Lounge Editions கார் - எவ்ளோ விலை?
Embed widget