மேலும் அறிய

அசைவ உணவை தவிர்க்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு... தெரியவந்த சுவாரஸ்ய தகவல்கள்!

ஒடிசாவில் பழங்குடியினர் அதிகம் வாழும் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கனவு நனவானதே என்றே சொல்லலாம்.

ஒடிசாவில் பழங்குடியினர் அதிகம் வாழும் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கனவு நனவானதே என்றே சொல்லலாம். குடியரசு தலைவர் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் அவர்களுக்கு மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முர்முவின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேரும், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்கள் ஆவர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு அளித்த மதிய உணவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையின் அலுவலர்கள் அழைப்பு விடுத்தபோது, ​​அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மயூர்பஞ்ச் மாவட்டத்தின் முன்னாள் ஜில்லா பரிஷத் தலைவரான சுஜாதா முர்மு கூறுகையில், "நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அவரும் இன்னும் சில பெண் விருந்தினர்களும் சந்தால் பழங்குடியின பாரம்பரிய சேலை அணிந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

இதே போன்ற அனுபவத்தை கயாமணி பெஷ்ரா மற்றும் டாங்கி முர்மு பெற்றுள்ளனர். நீண்ட காலமாக குடியரசு தலைவர் முர்முவுடன் நெருக்கமாக இருந்த இருவரும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். விருந்தில் கலந்து கொள்ளுமாறு முர்மு தங்களை அழைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

முர்முவின் சொந்த மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகை சுற்றி காண்பிக்கப்பட்டதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது விருந்தினர்களுக்கு இனிப்புப் பொட்டலமும் வழங்கப்பட்டது. இது ஒரு மறக்கமுடியாத அனுபவம் என்று சுஜாதா முர்மு கூறினார்.

மதிய உணவு மெனு பற்றி கேட்டபோது, ​​​​அது முற்றிலும் சைவ உணவு என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில், குடியரசு தலைவர் அசைவ உணவை சாப்பிடுவதில்லை என்றும் பூண்டு மற்றும் வெங்காயம் கூட சேர்த்து கொள்ளமாட்டார் என முர்முவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீட்கார்ன் வெஜிடபிள் சூப், பாலக் பனீர், தால் அர்ஹர் தட்கா, கோபி கஜர் பீன்ஸ், மலாய் கோஃப்தா, ஜீரா புலாவ், நான், புதிய பச்சை சாலட், பூண்டி ரைதா, கேசர் ரஸ்மலை, பழங்கள் ஆகியவை விருந்தில் வழங்கப்பட்டது. இருப்பினும், குடியரசு தலைவர் மாளிகைக்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்கள் அனுமதிக்கப்படாததால், குடியரசு தலைவருடன் செல்ஃபி எடுக்க முடியவில்லை என விருந்தில் கலந்து கொண்ட சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIESPonmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.Kதூதுவிடும் திமுக, அதிமுக தலைகள்! கண்டிஷன் போடும் விஜய்! விஸ்வாசம் தான் முக்கியம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
Bus Driver Sudden Death: ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
ஓடிக்கொண்டிருந்த பேருந்து; திடீரென மாரடைப்பால் சரிந்த ஓட்டுநர், அடுத்து நடந்தது என்ன.?
Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
Embed widget