மேலும் அறிய

6 PM Headlines: 6 மணி தலைப்புச்செய்திகள்..! ஒரே நிமிடத்தில் உங்களைச் சுற்றி நிகழ்ந்ததை அறிய..?

6 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • திருச்சி அருகே சன்னாசிபட்டி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி நலம் விசாரித்தார்.
  • மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப் பிரதா சாஹூ ஆலோசனை. வாக்குப்பதிவு அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
  • "அண்ணாமலை தலைமையில் பெண்கள் மீது அருவருப்பான தனிநபர் தாக்குதல்" - காயத்ரி ரகுராம் சரமாரி குற்றச்சாட்டு.
  • புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குச் சென்று நிறைவாக வழிபாடு. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன், அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்பு.
  • சம ஊதியம் கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்துள்ளது.
  • பல ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய அகவிலைப்படி தொகையை வழங்கக்கோரி வலியுறுத்தல் - சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது.
  • அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கக்கோரி வலியுறுத்தல் - தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம்.
  • புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர விடுதிகளில் 80 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி
  • ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39ஆவது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 
  • தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல  கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வறண்ட வானிலையேஇருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா: 

  • இந்தியவின் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை உடைய பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ)  தெரிவித்துள்ளது.
  • கடந்த இரண்டு நாள்களாக வெளிநாட்டில் இருந்து இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கிய 39 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
  • கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

உலகம்: 

  • சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - ஜனவரி 1 முதல் அமல்
  • கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர்  Marion Biotech Private Limited எனும் இந்திய நிறுவனம் தயாரித்த  Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவில் பனிப்புயல் மற்றும் வரலாறு காணாத குளிர் நிலவி வரும் நிலையில், உலகின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலுமாக உறைந்து போனது.

  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்ல, சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவிதித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. 

விளையாட்டு

  • கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்டின் சிறந்தடி20 வீரராக தேர்வு செய்ய இந்திய அதிரடி பேஸ்ட்மேனான சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியை தசுன் ஷனகா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Embed widget