10ல் 6 பேர் தவறான தகவல்களை தெரிந்துகொள்கின்றனர்: கூகுள் நடத்திய ஆய்வில் தகவல்!
தகவல்களை தேடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடவும் அந்தத் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது
யூகோவ் மற்றும் கூகுளின் ஆதரவுடன் இணைந்து Poynter இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் இந்தியா உட்பட பல நாடுகளில் பத்தில் ஆறு பேர் தவறான தகவல்கள் தாங்கள் பார்ப்பதாக நம்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில், யுகே, ஜெர்மனி, நைஜீரியா, ஆகிய நாடுகளில் பல்வேறு வயதுடைய 8,500க்கும் மேற்பட்டோரை இந்த ஆய்விற்காக அணுகி அவர்களின் பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வலைதளங்களின் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையானதா என்ற சந்தேகம் தங்களுக்கு இருந்து கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்
தகவல்களை தேடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடவும் அந்தத் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது என்றும் சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
சில தளங்களில் முதலில் ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அந்த செய்தியை நீக்கிவிடுவது, அந்த செய்தியை தாங்கள் பிறருக்கு சொல்லும் பொழுது தங்கள் மீது மற்றவர்கள் இருக்கும் நம்பிக்கைக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது என்றும் சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
இத்தகைய விஷயங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட செய்திகளின் ஆதாரங்களை உதாரணத்திற்கு ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இதிலும் குறிப்பாக புதிய பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இதில் இருக்கும் தகவல்களை நம்புவது பல வகையிலும் அவர்களுக்கு சிக்கலை உண்டு செய்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
சில இணைய பக்கங்களில் தாங்கள் கேள்விப்பட்ட அல்லது படித்தது உண்மையா என்பதைத் தீர்மானிக்கும் போது, எல்லா தலைமுறைகளிலும் உள்ள பதிலளிப்பவர்கள் மிக முக்கியமான விஷயம்,ஆதாரங்களால் அல்லது உண்மைகளால் கருத்துக்களை நிரப்பி விடுவதால் முடிவுகள் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகவும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
சில தளங்களில் பயனற்ற யோசனைகள் பயன் தரும் யோசனைகளை போல இருப்பதினால் பகுத்தறிந்து முடிவு செய்ய முடியாதவர்கள் அவைகளை உண்மை என நம்பி உடலுக்கும் மனதுக்கும் தீங்கான விஷயங்கள் செயல்படுத்துவது மறுப்பதற்கில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வருகிறது.
இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வரும் சிலர் இதில் வரும் முக்கியமான செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள உள்ளூர் நியூஸ் சேனல்களையும் உள்ளூர் இதழ்களையும் சரி பார்ப்பதற்கு பயன்படுத்துவதாகவும் கூறி இருப்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
வலைதளங்களிலும் சோசியல் மீடியாக்களிலும் முன்பின் அனுபவம் இல்லாத ஆர்வக்கோளாறான ஆட்களால் பரப்பப்படும் நிறைய மருத்துவ தகவல்களை நம்புகின்றவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.மற்றொரு பிரிவினரோ ஒரு செய்தியின் உண்மை தன்மையை அறிய நம்மை தேட வைப்பது வியாபார தந்திரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
படிக்கும் தகவல்களைக் காட்டிலும் பார்க்கும் நிறைய தகவல்கள், பின்னணி இசை,படத்தொகுப்பு, இவற்றின் மூலம் ஆகப்பெரிய நம்பகத்தன்மையை தருவதாகவும், ஆனால் இவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் ஒரு சாரார் தெரிவித்திருக்கிறார்கள்.
நிறைய சமூக ஊடகங்களில் கேட்கப்படும் விருப்பங்களின் அடிப்படையில் நம் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வியாபார உத்திகள் வகுக்கப்படுவதும் இதனால் பிரைவசி கேள்விக்குறியாக இருப்பதாகவும் இன்னும் சில பேர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆன்லைனில் நீங்கள் கண்டுபிடிக்கும் தகவலை நம்புவது எவ்வளவு முக்கியம் என்பதையும், நீங்கள் பார்ப்பதைச் சரிபார்க்க பல ஆதாரங்களைச் சரிபார்ப்பது அல்லது Google தேடல் போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்துவது. சிக்கலான டிஜிட்டல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.