மேலும் அறிய

முதலமைச்சர் பிஏ சுட்டுக்கொலை.. ஜிபே மூலம் சிக்கிய கொலையாளிகள்.. நடந்தது என்ன?

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு சுவேந்து அதிகாரியின் பிஏ சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கடந்த மே 6ம் தேதி தற்போது மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், மத்யம்கிராமில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சில அடி தூரம் சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டார். 

காரின் முன் இருக்கையில் ரத் அமர்ந்திருந்த நிலையில் அந்த காரை மற்றொரு கார் முன்னாள் சென்று வழிமறித்துள்ளது. அப்போது பைக்கில் வந்த 3 பேர் சந்திரநாத் தத்தை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் காவல்துறையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், விஷால் ஸ்ரீவஸ்தவா, ராஜ் சிங் மற்றும் மயங்க் மிஸ்ரா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொழில்முறை கொலையாளிகள் என தெரிய வந்துள்ளது. மூன்று பேரும் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் பிற மாநிலங்களில் இருந்து கொலை குற்றவாளிகள் வந்திருக்கலாம் என்ற கணிப்பில் சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு காரில் கைது செய்யப்பட்ட 3 பேர் அமர்ந்திருந்தது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் சுங்கச்சாவடியில் யுபிஐ மூலம் பணம் செலுத்தியது தெரிய வந்தது. அதனைக் கண்டறிந்த போலீசார் அதன்மூலம் கொலையாளிகளை எளிதில் நெருங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், ஒரு கார் கண்டறியப்பட்டது. 

சந்திரநாத் தத்தின் கொலை முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது எனவும், பவானிபூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். அதனால் இந்த கொலை நடந்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.முன்னாள் இந்திய விமானப்படை ஊழியரான சந்திரநாத் ரத் உடல் பூர்வா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. மேலும் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது குலூப் கிராமத்தில் உள்ள ஒரு மைதானத்தில் அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப்பட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget