மேலும் அறிய

Kashmir Encounter: விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டை...5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kashmir Encounter: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் ஐந்து பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதில் இருந்து, பயங்கராவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குல்காம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குல்காமில் உள்ள நெஹாமா பகுதியில் பயங்கராவதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் இரண்டு நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதாவது, இன்று காலை குல்காமில் உள்ள நெஹாமா பகுதியில் சாம்னோவில் என்ற இடத்தில் பயங்கராதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட 5 பேரிடம் இருந்து துப்பாக்கிகள் போன்ற பயங்கர ஆயதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளிவர வில்லை. ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடரும் நடவடிக்கைகள்:

முன்னதாக, கடந்த அக்டேபார் 26ஆம் தேதி குப்வாரா  மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்ள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

"நம்பிக்கை இருக்கு" - தேர்தல் நாளில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மெசேஜ் சொன்ன பிரதமர் மோடி

MP Chhattisgarh Election LIVE: மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"B ஃபார் பாபு, J ஃபார் ஜெகன், P ஃபார் பவன்" ஆந்திரா பார்முலாவை கையில் எடுத்த ராகுல் காந்தி!
Embed widget