ஆறு மாதத்தில் இல்லாத அளவுக்கு உச்சம்...டெல்லியில் தாண்டவத்தை தொடங்கிய கொரோனா
டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று 2,419 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று 2,419 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆறு மாதங்களில் அதிகபட்ச அளவாகும். கொரோனா பாதிப்பு 12.95 சதவீதமாக உள்ளது. மேலும் இரண்டு பேர் இந்த நோயால் இறந்ததாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
August 2022 #Delhi Corona Case
— Delhi Complaint (@DelhiComplaint) August 5, 2022
Positive Tests Positivity
Case Conducted Rate
5🗓️ 2419 18685 12.95%
4🗓️ 2202 18596 11.84%
3🗓️ 2073 17815 11.64%@LtGovDelhi @msisodia
தினசரி கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக 2,000-ஐத் தாண்டியுள்ளது. டெல்லியில் வியாழக்கிழமை 2,202 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனா தொற்று விகிதம் 11.84 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் மேலும் நான்கு பேர் இந்த நோயால் இறந்தனர்.
2,419 Covid Cases In Delhi Today, Highest In 6 Months
— Asif (@maasif1987) August 5, 2022
It was the third consecutive day that the daily count of COVID-19 cases crossed the 2,000-mark.
தொடர்ச்சியாக நான்காவது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தை தாண்டியுள்ளது. வியாழக்கிழமை டெல்லியில் 18,685 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், தேசிய தலைநகரில் கொரோனா எண்ணிக்கை 19,64,793 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 26,327ஐ எட்டியது.
@DDMADelhi1 today corona cases in Delhi is 2500 and the positive rate is 13%. Why you are waiting for taking steps to stop spreading of corona. Atleast closed school and college for 1 to 2 week to stop corona.
— Arjun thakur (@RaviKus20283471) August 5, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்