மேலும் அறிய

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்.. அமெரிக்காவுடன் கைகோர்க்கும் இந்தியா.. செம்ம பிளானா இருக்கே!

நம்பத்தகுந்த, மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தி விநியோகத்தை அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நீடித்த எரிசக்தி மாற்றத்தை நோக்கி இந்திய, அமெரிக்க நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்க மின் விநியோகத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில் இந்திய, அமெரிக்க நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் இந்தியா:

அமெரிக்க எரிசக்தி செயலர் ஜெனிபர் கிரான்ஹோல்ம் மற்றும் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் நேற்று வாஷிங்டன் டி.சி.யில் அமைச்சர்கள் அளவிலான எரிசக்தி கூட்டாண்மை கூட்டத்தில் பங்கேற்றனர்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி திறன், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வளர்ந்து வரும் எரிபொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட தென்கிழக்கு கடற்கரை பொருளாதார அமைப்பின் கீழ் உள்ள தொழில்நுட்ப தூண்களில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் குறித்து இருதரப்பும் ஆய்வு செய்தன.

தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் கூட்டாண்மையின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமைச்சர்கள் வரவேற்றனர்.

மலிவான விலையில் 24 மணி நேரமும் மின்சாரம்:

நம்பத்தகுந்த, மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தி விநியோகத்தை அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நியாயமான, ஒழுங்கான, நீடித்த எரிசக்தி மாற்றத்தை நோக்கி பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் அங்கீகரித்த அதே வேளையில், இரு நாடுகளின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஆதரவளிப்பதில் எரிசக்தி வர்த்தகம் ஆற்றும் முக்கிய பங்கை வரவேற்றன.

எரிசக்தி செயல்திறனை ஊக்குவித்தல் மற்றும் தொழில், கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற உயர் உமிழ்வு துறைகளில் கார்பன் நீக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றத்தை அமைச்சர்கள் அங்கீகரித்தனர்.

இந்தியாவில் ஹைட்ரஜன் பாதுகாப்புக்கான புதிய தேசிய மையம் மற்றும் 2024 செப்டம்பரில் நடைபெற்ற பசுமை ஹைட்ரஜன் குறித்த 2-வது சர்வதேச மாநாடு  ஆகியவற்றில் ஒத்துழைப்பை இரு நாடுகளும் வரவேற்றன. தூய்மையான ஹைட்ரஜன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செலவு குறைப்பு முயற்சிகள் மற்றும் பொது-தனியார் ஹைட்ரஜன் பணிக்குழுவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப நடவடிக்கை தளம் (ரீடாப்)மூலம் இரு நாடுகளிலும் ஹைட்ரஜன் மையங்களை செயல்படுத்துதல் குறித்த இருதரப்பு நிபுணர் பரிமாற்றங்களை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.

பேருந்துகள், டிராக்டர்கள் மற்றும் கனரக உபகரணங்களில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது குறித்த பணிகளையும் அமைச்சர்கள் வரவேற்றனர். நுகர்வோருக்கு 24 மணி நேரமும் நம்பகமான மின்சாரத்தை வழங்கமின் விநியோகத் துறையை நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் எடுத்துரைத்தன.

2030-ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்திய ரயில்வேயின் முயற்சிகளையும் அமைச்சர்கள் பாராட்டினர். மேலும், இந்தியாவின் 1.5 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் மற்றும் அனைத்து ரயில்வே வசதிகளுக்கும் எரிசக்தி திறன் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை வரவேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Embed widget