Railway Bridge Collapses :மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து... 17 பேர் உயிரிழப்பு
மிசோரம் மாநிலத்தில் கட்டுமானப்பணியின் போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்தபோது 40-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்ததால் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐஸ்வால் அருகே சாய்ராங்கில் கட்டுமான பணியின் போது ரயில்வே மேம்பாலம் இன்று இடிந்து விழுந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மிசோரம் முதல்வர் சோரம்தங்கா பதிவிட்டுள்ளதாவது: ”இந்த சோகத்தால் ஆழ்ந்த வருத்தமும் பாதிப்பும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன். மீட்புப் பணிகளுக்கு உதவியாக வந்துள்ள ஏராளமான மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.
— Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023
Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7
மிசோரமில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
Aizawl railway over bridge collapse | PM Narendra Modi announces an ex-gratia of Rs 2 lakhs from PMMRF to the next of kin of each deceased and Rs 50,000 to the injured. https://t.co/AmnZ31Ghz4 pic.twitter.com/mZxJkaN3bR
— ANI (@ANI) August 23, 2023
இது குறித்து பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது :”மிசோரமில் பாலம் இடிந்த விபத்து வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
'யானைகளின் சூப்பர் ஸ்டார் செங்களூர் ரங்கநாதன்’ ; ஆசியாவின் மிக உயரமான யானையின் உருக்கமான கதை!
திமுக, அதிமுகவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் - கட்சியினருக்கு பாசமாய் பாடம் எடுத்த திருமாவளவன்