மேலும் அறிய

Hogenakkal Flood : "ஒரே நாளில் இவ்வளவு தண்ணீரா?” காவிரி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

"ஒரு வாரமாக கரைபுரண்டு ஓடும் காவிரி நீர் - கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை”

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கிளை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, நுகு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Hogenakkal Flood :

தமிழகத்தை நோக்கி பாய்ந்து வரும் காவிரி நீர்

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கபினியில் 80,000, கிருஷ்ணசாகர் அணையில் 1.70 இலட்சம் கன அடி என  இரண்டு அணைகளிலும் சேர்த்து வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. 

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடியது. இதனால் ஒகேனக்கல் பகுதிகளில் பாறைகள், அருவிகள் தெரியாத அளவிற்கு தண்ணீரில் மூழ்கி வெள்ளைக் காடாய் காட்சியளித்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீண்டும் கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்ததால், கேரள மாநிலம், வயநாட்டில் கன மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கபினியில் மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் மற்றும் நுகு உள்ளிட்ட இருந்து,  தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை வினாடிக்கு 1.40 இலட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.70 இலட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 18-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்து வருகிறது. அதே போல் அதிகப்படியான வெள்ளம் வரும் என்பதால், காவேரி கரையோரப் பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல்

மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் பகுதியில் அரசு பள்ளி, தனியார் மண்டபம் என பொதுமக்களுக்கான தங்குவதற்கு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கான நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நேற்று திறக்கப்பட்ட 2.50 லட்சம் கன அடி தண்ணீரும் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் காவிரியில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரும் பட்சத்தில் காவிரி கரையோரம் உள்ள ஆலம்பாடி, ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் போன்ற பகுதிகளில் தங்கும் விடுதிகள், குடியிருப்புகளை தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது. அதேபோல் ஒகேனக்கல்- தேன்கனிக்கோட்டை பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில் இருந்து வருகிறது. 

இதனால் காவேரி கரையோரம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு, தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Embed widget