மேலும் அறிய

ஒகேனக்கல் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை.. பெரும் பரபரப்பு..

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை.. குடிநீருக்கு பயன்படும் தண்ணீர் என்பதால், யானை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்.

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை : குடிநீருக்கு பயன்படும் தண்ணீர் என்பதால், யானை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

ஒகேனக்கல் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை.. பெரும் பரபரப்பு..

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை

காவிரி ஆற்றில் ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி அருகே உயிரிழந்த நிலையில் யானை அடித்து வரப்பட்டுள்ளது. இதனை கண்ட மக்கள், ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த வனத் துறையினர, யானை உடலை மீட்க முயற்சி செய்துள்ளதுள்ளனர்.

அப்பொழுது யானை உயிரிழந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது‌. இதை தொடர்ந்து கர்நாக மாநில வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இறந்த நிலையில் பெண் காட்டு யானை

இதில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி கரையோர பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த உயிரிழந்த காட்டு யானையை கர்நாடகா மாநில வனத் துறையினர் பிரேத பரிசோதனை செய்து, வன விலங்குகளின் உணவிற்காக அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை உடல்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 17,000 கன அடியாத திறக்கப்பட்டது‌. அப்பொழுது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால்,  உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை அடித்து வரப்பட்டது‌. அப்போது பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது. 

தண்ணீரில் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது

மேலும் உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரில் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்  பருகுவதால், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட  காலங்களில் ஆற்று நீர் கலங்கள் காரணமாக பலருக்கு உடல் உபாதைகள், வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர்ரை நம்பியுள்ள இரண்டு மாவட்ட மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

கர்நாடக வனத்துறையினர் செய்த செயலால் இரண்டு மாவட்ட மக்கள் பாதிப்பு

மேலும் கர்நாடகா வனத் துறையினர் உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப் பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால், இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

 மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடக வனப்பகுதியிலேயே அடக்கம் 

தொடர்ந்து கர்நாடக வனத் துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடக வனப் பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளதாக, தமிழக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதால், ஆற்றிலிருந்து யானையின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உயிரிழந்து, பிரேத பரிசோதனை செய்த யானை உடல் காவிரி ஆற்றில் மிதந்து கிடப்பதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருந்தும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
"கிடைச்ச இடத்துல சாப்பிட்டேன்.. கிடைச்ச இடத்துல தூங்குனேன்" அமெரிக்காவில் பிரதமர் மோடி உருக்கம்!
"6 மணிக்கு விளக்கு ஏத்துங்க.. தோஷம் போயிடும்" பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
Video: அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனாAtishi CM oath : கெஜ்ரிவாலுக்கு காலி CHAIR! பரதன் பாணியில் அதிஷிRowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!Rowdy Seizing Raja | ஆட்டம் காட்டிய சீசிங் ராஜா! ரவுடியை அடக்கிய அருண் IPS..அடுதடுத்த ENCOUNTER..

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
"கிடைச்ச இடத்துல சாப்பிட்டேன்.. கிடைச்ச இடத்துல தூங்குனேன்" அமெரிக்காவில் பிரதமர் மோடி உருக்கம்!
"6 மணிக்கு விளக்கு ஏத்துங்க.. தோஷம் போயிடும்" பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
Video: அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
A.Raja: ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆ.ராசா நம்பிக்கை
ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆ.ராசா நம்பிக்கை
Miss Universe India: இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் 18 வயதான ரியா சிங்கா.! யார் இவர்.?
இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் 18 வயதான ரியா சிங்கா.! யார் இவர்.?
Breaking News LIVE:  சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.!
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.!
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Embed widget