மேலும் அறிய

விவசாயிகளை பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியுதா? டென்ஷன் ஆனா அய்யா கண்ணு - நடந்தது என்ன?

விவசாய சங்கத்தினர் ஆய்வுக்கு செல்லும் வழியில் கற்களை கொட்டியதால் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவர்கள்.

காவிரி ஆற்றில் விவசாயிகள் ராசி மணல் பகுதிக்கு சென்று வந்த வழியில் ஜல்லி கற்கள் கொட்டியதால் விவசாய சங்க தலைவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராசி மணல் பகுதியில் ஆய்வுக்கு சென்ற கர்நாடகா மற்றும் தமிழக விவசாய சங்க தலைவர்கள்

தமிழக  காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் ராசி மணலில் அணை கட்டுவதற்கு கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்கள் பயன்பெறும் பெறுவதை குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் சாந்தகுமார் இரு மாநில விவசாய சங்க தலைவர்கள் 15 பேர் கொண்ட குழு 27-ஆம் தேதி தஞ்சாவூரில் கலந்துரையாடல் நடத்தி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். 

இன்று காலை ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு ராசி மணல் அணைக்கட்டும் இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விவசாய சங்க தலைவர்கள் செல்லும் வழியில் ஜல்லி கற்களை கொட்டியதால் வாக்குவாதம்

அப்பொழுது தேன்கனிக்கோட்டை சாலையிலிருந்து பிலிகுண்டுலு வரை புதிய சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள் வந்த வாகனங்கள் பாதையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானனர்.

திடீரென தேன்கனிக்கோட்டை சாலையில் காரை குறுக்கே போட்ட அய்யாக்கண்ணு

இதனால் கோபமடைந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு திடீரென ஓசூர் தேன்கட்டை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  விவசாயிகளை பார்த்தால் பிச்சைக்காரர்கள் மாதிரி தெரிகிறதா? வயித்துக்கு சோறு தானே சாப்பிடுற கொலைகார பாவிகளா என்று ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் விவசாயிகள் வனப்பகுதிக்குள் செல்லும்போது ஜல்லி கற்கள் கொட்டுவதைக் கண்டு காவல் துறையினரிடம் விவசாயிகள் வெளியில் வரும் வரை ஜல்லி கற்களை பரப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஜல்லி கற்களை பரப்பியதால் வாகனங்கள் வருவதற்கு சிரமங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் விவசாய சங்க தலைவர்கள் ஈடுபட்டனர். 

விவசாயிகள் உள்ளே சென்றதை அறிந்து வேண்டுமென்று கற்களை பரப்பிய ஒப்பந்ததாரர்கள்

விவசாயிகள் உள்ளே சென்றதை அறிந்தே வேண்டுமென்றே ஜல்லி கற்களை கொட்டி உள்ளனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு உடனே அலைபேசியில் அழைத்த அய்யா கண்ணு

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியின் வாயிலாக பேசிய அய்யாக்கண்ணு வேண்டுமென்றே விவசாயிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஒப்பந்ததாரர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பணிகள் தரம் இல்லாத இருப்பதினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது

இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் விவசாய சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். விவசாயிகள் சென்ற பிறகு சாலையில் ஜல்லி கற்கள் கொட்டியதால் கோபமடைந்த விவசாய சங்க தலைவர்கள் ஒப்பந்ததாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியல் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget