விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்! ஒரே நாளில் பயிர் கடன் ; உடனே விண்ணப்பியுங்கள்
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்திற்கு, அரசு 'இ - சேவை' மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தர்மபுரியில் துவக்கப்பட்ட, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்திற்கு, அரசு 'இ - சேவை' மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயிர் கடன்
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றது. ஆனால், குறித்த காலத்தில் கடன் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. எனவே, பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவு துறை முடிவு செய்தது.
ஒரே நாளில் பயிர் கடன் வழங்கும் திட்டம்
இத்திட்டத்தை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, 'ஆதார்' கட்டாயம்.
இ-சேவை மையம் சென்றால் உடனடி பயிர் கடன்
இ - சேவை மைய ஊழியர்கள், சங்கங்களின் பயிர் கடனுக்கான இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் போது, சங்க அதிகாரிகள், 'டி.என்.கிரெய்ன்ஸ், தமிழ் நிலம்' இணையதளங்களில் இருந்து விவசாயிகளின் ஆவணங்களை பரிசீலித்து, அன்றே வங்கி கணக்கில் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பர்.
அரசு, இ - சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வருமான சான்று என, பல்வேறு சான்றுகள் வழங்கப்படுகின்றன. பல விவசாயிகளுக்கு கணினி இயக்கத் தெரியாது. அவர்கள், மற்றவர்கள் உதவியுடன் பயிர் கடனுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, சரியாக பூர்த்தி செய்யப்படாத பட்சத்திலும், கடன் கிடைக்கவில்லை என்று கூறுவர். இதை தவிர்க்கவே அரசு இ - சேவை மையத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கை முடிவின்படி, எந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியையும் பணம் பெருக்கும் நோக்கத்துடன் செயல்படாமல், இவை விவசாயிகளின் நன்மைக்காக குறிப்பிட்ட தேவைக்காக செயல்படும் பகுதிகளில் சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை முக்கியமான அச்சாணியாகக் கருதி, இதன் மீது ஒருங்கிணைந்த தேவைகளான கடன், காப்பீடு, இடுபொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்க செயல்பாடுகளை விவசாயிகளுக்கு வழங்க முடிகிறது. விவசாயத் துறயைில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து, 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள் வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகுக்கின்றது. விவசாயிகளின் செழிப்புகளை அதிகரிப்பது மற்றும் சரியான சேவைகளைப் பெற்று தொழில்நுட்ப தலையீடுகளுடன் மேம்படுத்த முனைந்துள்ளது. இந்த முறையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயத் துறை, ஆராய்ச்சி மற்றும் சேவைகளை ஒரு குடையின் கீழ் வழங்குகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நெல் கொள்முதல் நிலையங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக செயல்பட்டு நெல் கொள்முதலை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு அறிவித்த தொகையில் டெல்டா இல்லாத பகுதிகளில் செயல்படுகிறது. இது தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலம் இயக்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள் சேர்க்காமல் தனித்து இயங்குகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை மற்றும் இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED) ஆகியவற்றின் மூலம் விவசாயப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு உதவுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விளைபொருட்கள் மீது கடன் வழங்குவதை விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டத்தை விளைச்சல் மீது கடன் வழங்குவதை விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டத்தை விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் தவிர்ப்பதற்காக பயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.





















