மேலும் அறிய

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கொலை மிரட்டல்; இது அவரது மனைவிக்கும் தெரியும்” - தற்கொலைக்கு முயன்ற பெண்

”கடை உரிமையாளர் நவநீதன் என் குடும்ப சூழலை பயன்படுத்தி என்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இது அவரது மனைவிக்கும் தெரியும்” என வீடியோ மற்றும் கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.

பாலியல் தொல்லை:

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பெண். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், குழந்தை இல்லை. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அப்பெண், பவானியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர் பவானியில் உள்ள சிமெண்ட் மற்றும் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அவர் வேலை பார்க்கும் கடையின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள குளியலறைக்கு சென்ற அவர், கேனில் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி மற்றும் உடல் நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் மருத்துவச் செலவிற்கு கடை உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அப்பெண் பேசும் வீடியோ பதிவு மற்றும் எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகியுள்ளது. அதில், ”எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. என் கணவரை பிரிந்து எனது அம்மா வீட்டில் வசித்து வருகின்றேன். நான் கடந்த 11 வருடங்களாக விநாயகா செராமிக்ஸ் என்ற சிமெண்ட் அண்ட் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறேன். கடை உரிமையாளர் நவநீதன் என் குடும்ப சூழலை பயன்படுத்தி என்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தார். அவர் மனைவி அகிலாவுக்கு தெரியும். ஆனால் அவர்கள் கணவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. 

என்னிடம் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து விட்டு என்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி என் மேல் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவேன் என்றும், என்னை அவர்கள் குடும்பத்தில் உள்ள அவரின் உறவினர்கள் எல்லோரும் என்னை மிரட்டுகிறார்கள். என் வறுமையின் காரணமாக வேலைக்கு போனேன். இந்த மாதிரி காமவெறி கொண்ட பல முதலாளிகள் இருக்கிறார்கள். என்னைப்போல் அப்பாவி பெண்கள் வாழ்க்கையில் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு ஆறுமுறை கருகலைப்பு  நடந்து இருக்கிறது. அதற்கு காரணம் நவநீதன், அகிலா.

என் மரணத்திற்கு காரணம் இவர்கள் நான்கு பேர் மட்டும்தான். என் குடும்பத்திற்கு எதுவும் தெரியாது அவர்கள் பணம் பலம் உள்ளவர்கள் எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இனிமேல் அப்பாவிகள் இழக்கக்கூடாது. கடைசியாக நானே இருக்க  வேண்டுகிறேன். என் மரணத்திற்கு அவர்கள் நான்கு பேர் மட்டும் என்னை எப்போது வேண்டுமென்றாலும் கொன்றுவிடுவார்கள். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுநாள் வரைக்கும் எனக்கு எந்த உதவியும் அவர்கள் செய்யவில்லை. பொய் சொன்னால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நான் கடைசியாக எழுதும் என் வாக்குமூலம்” என கடிதம் எழுதியுள்ளார். இதேபோல தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ பதிவும் செய்துள்ளனர்.

காவல்துறையினர் இந்த பிரச்சினையை மூடி மறைத்து வருகிறார்கள் எனவும், எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோ மற்றும் கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget