மேலும் அறிய

’பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும்’ - எஸ்.பி. வேலுமணி பேச்சு

"பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டும் செல்லாத‌ ஓட்டாக‌ போகி விடும். திமுகவிற்கு சாதகமாகி விடும் ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும்"

திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் அதிமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய   முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எதிர்கட்சி தலைவராக கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டு உள்ளார். திமுக நிர்வாகி 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் கஞ்சா விற்கிறார்கள்.

மாணவர்களையும் இளைஞர்களையும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். திமுக பொறுப்பாளர்கள் கஞ்சா விற்கிறார்கள். கஞ்சா விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தப் இல்லை. பத்திரிகையாளர்களும் காவல் துறையும் சரியாக இருந்தால் இது எல்லாம் நடக்காது. மத்திய அரசு கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை. விளம்பரத்தில் மட்டுமே இந்த அரசு உள்ளது. சிறுவாணி அணையில் தண்ணீரை கேரள அரசு குறைத்ததை தட்டி கேட்கவில்லை. திமுக அரசு செய்தது எல்லாம் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான்.  38 எம்.பி.க்கள் தெண்டமாக இருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை பற்றியும் பேசவில்லை. 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயித்த 38 எம்.பி.க்கள் எதுவும் செய்யாமல் தெண்டமாக உள்ளார்கள். கோவையை சுற்றியுள்ள 5 தொகுதிகளின் எம்.பி.க்களை பார்க்க முடியவில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.


’பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும்’ - எஸ்.பி. வேலுமணி பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுபவர்கள். திமுக அரசு மகளிர் உரிமை தொகை பாதி பேருக்கு தான் தந்துள்ளார்கள். அது திமுக குடும்ப பணம் இல்லை. உங்கள் பணத்தை தான் கொடுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கொடுப்பார். அதைவிட கூடுதலாக தருவார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்கள் நினைக்கின்றனர். தொழில்கள் முடங்கி விட்டது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். கோவை மாவட்டத்திற்கு வளர்ச்சி வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும். திமுகவிற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அப்படி கஷ்டப்படுத்தி விட்டார்கள். பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும். திமுகவிற்கு சாதகமாகி விடும். ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் தான் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு அடிமை. நாங்கள் எப்போதும் யாருக்கும் அடிமை இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். கோவை மாவட்டத்தை புறக்கணித்த திமுகவை புறக்கணிப்போம்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget