மேலும் அறிய

கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ். பி. வேலுமணி கோரிக்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடியிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடியிடம் இன்று மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர்  மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது. குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம்.

கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ். பி. வேலுமணி கோரிக்கை

முறையாக குடிநீர் வழங்குவதில்லை

அதிமுக ஆட்சியில் குளங்கள், அணைகள் தூர் வாரப்பட்டது, நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது. ஆனால் இப்போது இவை செயல்படுத்த படுவதில்லை. கோவை மாவட்டத்தில் பில்லூர், சிறுவாணி, அழியார் அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரம். இந்த அணைகள் தூர் வாரி இருக்க வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட இப்போது அமைப்பதில்லை. இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மாநகராட்சி நிர்வாகம் இதை முறையாக கவனிப்பதில்லை. முறையாக குப்பைகள் கூட எடுக்கவில்லை. சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை. இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை.

தென்னை மரங்களை காப்பாற்ற வேண்டும்

எஸ்ஐஎச்எஸ் காலனி பாலம் விரைத்து முடிக்க வேண்டும். கோவையில் நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும். பொதுக் கழிப்பிடங்கள் கூட சுத்தம் செய்யப்படுவதில்லை. போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது. இதற்கு உடனே அனுமதி அளிக்க வேண்டும். சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. அவற்றை வேகமாக போட வேண்டும். பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர். அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர். இதை தடுக்கக் கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை. கோவை மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை, குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
Embed widget