'மாமன்னன் ராஜராஜ சோழன்போல பிரதமர் மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்' - வானதி சீனிவாசன்
”தஞ்சாவூரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன்போல ஆயிரமாண்டுகள் தாண்டியும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்”
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அயோத்தியில் நாளை ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகால கனவு. இந்த கனவு இப்போது நனவாகியுள்ளது.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாட்கள் தரையில் உறங்கி, கடுமையான விரதம் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது ராமரோடு தொடர்புடைய கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி திரும்பியுள்ளார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் போல பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 21, 2024
அயோத்தியில் நாளை ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகால கனவு. இந்த… pic.twitter.com/uhU9eh0Cdo
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்றி ராமர் கோயில் சாத்தியமாகி இருக்காது. நம் தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் போல ஆயிரமாண்டுகள் தாண்டியும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். ராமர் கோயிலுக்காக 500 ஆண்டுகளாக போராடி அனைவருக்கும் இந்த நேரத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.