மேலும் அறிய

Tomato price: 'தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பதா?' - வானதி சீனிவாசன் கண்டனம்

தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்விலும் அரசியல் செய்யாமல், விலை உயர்வை தடுக்கவும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்கவும் திமுக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ திடீர் மழை, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்க முடியாத திமுக அரசு, வழக்கம் போல மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய திமுக அரசு, ஊழல் வழக்கில் கைதாகி மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவது பற்றிதான் கவலைப்பட்டு கொண்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலக அளவிலான பொருளாதார மந்தநிலை, கொரோனா பேரிடர் போன்ற எதிர்பாராத நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்து, உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு விடை பெறும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 34 ஆக இருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு விடைபெறும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72 ஆக உயர்ந்தது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 96 ஆக (உத்தரப்பிரதேசம், புதுச்சேரி போன்ற பல மாநிலங்களில்) உள்ளது. தமிழகத்தில் திமுக அரசு விதித்த வரி காரணமாக பெட்ரோல் விலை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், புதுச்சேரியைவிட ரூ. 6 அதிகமாக ரூ.102 ஆக உள்ளது.

2013-14-ல் ரூ. 74,920 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2023-ல் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சராசரி சில்லறை பணவீக்கம்  2005-2014 காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது 8.7 சதவீதமாக உயர்ந்தது. ஆனால்,  பாஜக ஆட்சியில் 4.8 சதவீதத்தோடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் ஊழலற்ற, வெளிப்படையான, திறமையான நிர்வாகமே இதற்கு காரணம்.

தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசி, துவரம் பருப்பு, தக்காளி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. தக்காளி, வெங்காயம் காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்களின் விலை ஓராண்டு சரிந்தால், அடுத்த ஆண்டு அதனை பயிரிடுவதை பல விவசாயிகள் தவிர்த்து விடுகிறார்கள். மழைக்காலம் அல்லாத காலங்களில் திடீர் திடீரென பெய்யும் மழையும் பயிர்களை அழித்து விடுகிறது. விலை உயர்வுக்கு இதுவும் காரணம். இவற்றை தவிர்க்க தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் எல்லா காலங்களிலும் சீரான விலையில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து மாவட்டங்களிலும் குளிப்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பருவம் தப்பி மழை பெய்யும் போது அதனால் பயிர்கள் சேதம் அடையாமல் பாதுகாக்க தொழில்நுட்ப வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அந்த உணவுப் பொருட்களை, தமிழகத்திலேயே முழுமையாக விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமானால், அவர்களிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் தமிழக அரசே விற்பனை செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக, நம் தமிழகத்திலேயே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் வழங்கலாம். துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளையும் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைந்து மக்களும் பயனடைவார்கள்.

அதை விடுத்து மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அதனை மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே இது தொழில்நுட்ப யுகம். எது உண்மை? எது பொய்? என்பதை மக்கள் நன்கறிவார்கள். எனவே, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்விலும் அரசியல் செய்யாமல், விலை உயர்வை தடுக்கவும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்கவும் திமுக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ | Maaveeran Review: கோழை டூ வீரன்... அட்ஜஸ்ட்மெண்ட் டூ ஆக்‌ஷன்... மேஜிக் செய்ததா மாவீரன்? ஃபர்ஸ்ட் க்ளாஸ் திரை விமர்சனம்!

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget