மேலும் அறிய

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை என திமுக ஏமாற்றுகிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

”மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக 1200 கோடி ரூபாய் தந்தது. ஆனால் வெள்ள நிவாரண நிதி தரவில்லை என தி.மு.க மக்களை ஏமாற்றி வருகிறது”

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜா வீதியில் பா.ஜ.க. மண்டல அலுவகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவr வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பா.ஜ.க மண்டல அலுவகத்தை திறந்து வைத்தார். பின்னர் மகளிர்கள் சுலபமாக நாப்கின் பெற வசதியாக தானியங்கி நாப்கின் வழங்கும் மிஷினை அவர் இயக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலுக்கு கட்சியின் செயல்பாடுகள் முழுமையாக தொடங்கிவிட்டது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் மண்டல அலுவலகம் தொடங்கி, மக்களின் கோரிக்கைகள், தேவைகளை அறிந்து செயல்படவும், கட்சியின் செயல்பாடுகள், மோடியின் சாதனைகளை கட்சியினர் விளக்க வேண்டும்.

தென் தமிழகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது. அங்கே பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்‌. ஆனால் தமிழகத்தில் பாதிக்க`ப்பட்ட மக்களை சந்திக்காமல் தி.மு.க  தலைவரும் முதல்வரான ஸ்டாலின் டெல்லியில் இண்டி கூட்டணி பற்றி பேச சென்று உள்ளார். தேர்தலுக்காக நாடகம் போடுவது தி.மு.க தான். திமுக அரசு மக்களை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் நிதி தந்தும், சாலைகள் சரியாக போடவில்லை. ஒப்பந்ததாரர்கள் மக்கள் வரி பணத்தை வீண் அடிக்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் விளக்க நோட்டீஸ் அனுப்பவே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசு, நிவாரண நிதியாக 1200 கோடி ரூபாய் தந்தது. ஆனால் தி.மு.க மக்களை ஏமாற்றும் வேலையாக செய்து வருகின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல், ஏமாற்றி, டோக்கன் தருகிறோம் என்று அதற்கு பணம், ரேஷன் கடையில் பணம் பெற நீண்ட வரிசையில் நிற்க வைத்து பெண்களை அலைக் கழித்து வருகிறார்கள்.

தென் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராம்ன், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்பு பணிகளை செய்ய உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல நிவாரண உதவிகளும் செய்து வருகின்றனர். செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்தும், துறையில்லாத அமைச்சர் என நம்மை ஏமாற்றினர். அதேபோல பொன்முடி அமைச்சர் பதவி மட்டும் இல்லாமல், எம்.எல்.ஏ பதவி பறி போகும் நிலை தான் உள்ளது. மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக 1200 கோடி ரூபாய் தந்தது. ஆனால் வெள்ள நிவாரண நிதி தரவில்லை என தி.மு.க மக்களை ஏமாற்றி வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget