மேலும் அறிய

’எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையல்ல’ - வைகோ திட்டவட்டம்

”எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. அவரது மகனையோ, மகளையோ, கட்சி நிர்வாகிளையோ கேட்டால் உண்மை என்ன என்பது தெரியும்”

ஈரோடு மக்களவை உறுப்பினராக இருந்தவர் கணேச மூர்த்தி. மதிமுகவின் மூத்த தலைவரான அவர், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த கணேச மூர்த்தி, கடந்த 24-ம் தேதி தென்னை மரங்களுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இன்று காலை சிகிச்சையின் போது கணேசமூர்த்திக்கு ஏற்பட்ட  மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த கணேசமூர்த்தி உடல் ஈரோடு பெருந்துறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. கணேச மூர்த்தியின் உயிரிழப்பு மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கணேசமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கடந்த 2019 ம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினரானார்.


’எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையல்ல’ - வைகோ திட்டவட்டம்

உயிரிழப்பிற்கு காரணம் என்ன?

சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இரண்டு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கிறோம். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தார். அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். எம்.பி. சீட் கொடுத்த விவகாரத்தில் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்.

இந்த முடிவிற்கு வருவார் என நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கின்றது. மருந்து குடித்து விட்டார் என்றபோதே எனக்கு உயிர் போய்விட்டது. எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. அவரது மகனையோ, மகளையோ, கட்சி நிர்வாகிளையோ கேட்டால் உண்மை என்ன என்பது தெரியும். அவர் மறைந்தார் என்ற செய்தி என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் மருந்து குடித்தார் என்ற செய்தியையே தாங்க முடியவில்லை. அவ்வளவு மன உறுதி கொண்டவர். நெஞ்சத் துணிவு கொண்டவர், எதைப் பற்றியும் கவலைப்படாதவர். இத்தனை ஆண்டுகளாக எந்தப் பதவியிலும் இல்லை என்பதை பற்றி கவலைப்படாதவர். கொங்கு மண்டல திராவிட இயக்க சரித்திரத்தில் அழியாத நட்சத்திரமாக இருப்பார் என்பதை வேதனையோடு, மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என கண் கலங்கியபடி நா தழுதழுக்க தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார்” - நேருக்கு நேர் மோதி இருவர் பலி...
”கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார்” - நேருக்கு நேர் மோதி இருவர் பலி...
சிக்கிய ₹24 லட்சம் பணம்... கோவையில் பறக்கும் படை அதிரடி…
சிக்கிய ₹24 லட்சம் பணம்... கோவையில் பறக்கும் படை அதிரடி…
“செந்தில் பாலாஜிக்கு சவால்
“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...
தமிழக பேருந்து கர்நாடகாவில் பறிமுதல்!! சிக்மங்களூரில் போலீஸ் அதிரடி...
தமிழக பேருந்து கர்நாடகாவில் பறிமுதல்!! சிக்மங்களூரில் போலீஸ் அதிரடி...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
GOLD SILVER RATE: அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
“செந்தில் பாலாஜிக்கு சவால்
“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
iPhone 18 Leaks: இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?
Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?
Embed widget