மேலும் அறிய

Crime: மின் இணைப்பு பெற நகராட்சி ஆணையாளர் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய இருவர் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மின் இணைப்பு வாங்கிய நகராட்சி முன்னாள் ஊழியர் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த நித்யா மனோகரன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்து வருகிறார். நகராட்சி ஆணையராக முத்துசாமி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பயனாளி ஒருவர் மின் இணைப்பு பெறுவதற்காக படிவம் 7-ல் கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் கையெழுத்து வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை அணுகியுள்ளார். அதற்கு, மின் இணைப்புப் பெற ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் கையெழுத்து இட்ட படிவம் கொடுக்கப்பட மாட்டாது என நகராட்சி ஆணையர் தரப்பில் பதில் தரப்பட்டது.

இதற்கு அந்த நபர், கருமத்தம்பட்டி நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் நகராட்சி ஆணையரின் முத்திரை மற்றும் கையெழுத்துடன் படிவம் 7 ஐ பயன்படுத்தி மின் இணைப்பு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதங்களாக படிவங்களில், தான் கையெழுத்து எதுவும் போடாத நிலையில், எப்படி மின் இணைப்பு பெற்றார்கள் என நகராட்சி ஆணையருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து, தனது  கையெழுத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி யாரேனும் மின் இணைப்பு பெற்றிருக்கிறார்களா? என தெரிந்து கொள்ள நகராட்சி ஆணையர் எலச்சிபாளையம் மின் வாரிய அலுவலகத்தை அணுகினார்.

அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சோமனூர் செந்தில் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் தங்கராஜன், கருமத்தம்பட்டி நகராட்சியின் அனுமதியின்றி பிருந்தாவன் நகரில் கட்டப்பட்ட10 வீடுகளுக்கு நகராட்சி அலுவலக முத்திரையுடன் ஆணையரின் கையெழுத்திடப்பட்ட போலி படிவங்கள் மூலம் மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மின் இணைப்பு பெற்றது தொடர்பாக நகராட்சி ஆணையர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்  கருமத்தம்பட்டி நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சக்திவேல் என்பவர், நகராட்சி ஆணையரின் முத்திரை மற்றும் போலி கையெழுத்தை பயன்படுத்தி படிவம் 7 ஐ தயாரித்து சட்ட விரோதமாக மின் இணைப்பு பெற உதவியது தெரியவந்தது. இதனையடுத்து போலி படிவம் மூலம் மின் இணைப்பு பெற்ற தங்கராஜன் மற்றும் அதற்கு உதவிய சக்திவேல் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget