கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது
சாலை ஓர வியாபாரியாக உள்ள சங்கீதா என்ற பெண்ணிடம் முதலில் குழந்தையை பணத்திற்காக கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்ததால் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.
![கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது Three arrested for kidnapping 5 month old baby girl in Pollachi coimbatore கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/aa1f22fe09b4c5c8b2940b4b4d2e182c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - சங்கீதா தம்பதியினர். இவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் சாலை ஓரத்தில் பொருட்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களது 5 மாத குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். வால்பாறை டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கொண்டு மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் ஆனைமலையை சேர்ந்த ராமர் (49), முருகேசன் (39) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை பணத்திற்காக கடத்தியது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கு குழந்தை இல்லாததால் பணத்திற்காக குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துச்சாமியையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக பிடித்து குழந்தையை மீட்ட காவலர்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், "கோவை மாவட்டத்தில் இதுவரை பணத்திற்காக குழந்தை கடத்தல் நடைபெற்றதில்லை. முதல்முறையாக 5 மாத குழந்தை பணத்திற்காக கடத்தப்பட்டுள்ளது. ஆனைமலையில் சாலை ஓர வியாபாரியாக உள்ள சங்கீதா என்ற பெண்ணிடம் முதலில் குழந்தையை பணத்திற்காக கேட்டுள்ளனர். ஆனால் அவர் குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் குழந்தைக்கு சில்லி சிக்கன் வாங்கி கொடுக்குமாறு 50 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, குழந்தையை கடத்தி உள்ளனர்.
குழந்தையை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 கிலோ மீட்டர் தூரம் சிசிடிவி கேமரா பதிவு சோதனை செய்யப்பட்டது. ஆனைமலையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், ராமர், முருகேசன் ஆகியோர் குழந்தையை கடத்தி விற்பனை செய்துள்ளனர். இதற்காக முதல் கட்டமாக ரூ.50 ஆயிரமும், குழந்தையை பெற்று கொண்டு ரூ.40 ஆயிரமும் பணத்தை பெற்றுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தை முத்துப்பாண்டி வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். ஏழ்மையில் இருந்தும், அதிகமாக பணம் கொடுத்தும் குழந்தையை கொடுக்காமல் இருந்த குழந்தையின் தாயை பாராட்டுகிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)