மேலும் அறிய

‘வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்த ஆளுநர் தலையில் நீதிமன்றம் கொட்டு வைத்திருக்கிறது’ - திருமாவளவன்

ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்த நிலையில், அவரது தலையில் கொட்டு வைத்திருக்கின்றது. இந்த தீர்ப்பை அவர் மதிப்பார் என நினைக்கின்றோம்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்திதாசர் மணிமண்டபம் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். டிசம்பர் 23 திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறுகின்றது எனவும் இதில்  இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர் எனவும், முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார்.

5 மாநில தேர்தல் வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கின்றது எனவும், கர்நாடக மாநிலத்தில்  பாடம் புகட்டியதை போல, 5 மாநிலத்திலும் பா.ஜ.கவிற்கு  தோல்வியை கொடுப்பார்கள் என நாடே எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு கூடி இருக்கின்றது என தெரிவித்த அவர், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா கூட்டணியின் செயல்பாடு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் தமிழக அரசுக்கும், திமுகவிற்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுகின்றார் எனவும், பல்கலைகழக மசோதாக்கள் திருப்பி அனுப்பியது அரசமைப்பு சட்ட விரோத்ததை காட்டுகின்றது எனவும் தெரிவித்தார். பல்கலை கழக வேந்தர் நியமனங்கள் முதல்வரால் என்பதை ஆளுநரால் சகிக்க முடியவில்லை எனவும், தனியார் பல்கலை கழக  வேந்தர்களாக  உரிமையாளர் இருப்பதை  ஏற்றுக்கொள்கின்றார், ஆனால் முதல்வர் அரசின் பல்கலை கழகங்களுக்கு  வேந்தராக இருப்பது ஆளுநரால் ஏற்க இயலவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக ஆளுநரின் போக்கை சுட்டிகாட்டி நீதிமன்றம் கண்டித்து இருக்கின்றது எனவும், உச்சநீதிமன்றம் கொட்டு வைப்பதற்கு முன்பு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஏற்கனவே விடுதலைகள் சிறுத்தைகள் சொல்லி இருந்தோம் எனவும் தெரிவித்தார். ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்த நிலையில், அவரது தலையில் கொட்டு வைத்திருக்கின்றது எனவும், இந்த தீர்ப்பை மதிப்பார் என நினைக்கின்றோம் எனவும் தெரிவித்தார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோமக்களுக்கு ஒப்புதல் அளிப்பார் என நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

ஈரோடு இந்திரா நகரில் தலித் இளைஞர்கள் கொடூரமாக  தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், தாக்கியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார். இந்தியாவின் தலைமை நீதிபதி ஆளுநருக்கு வழிகாட்டுதல் இருப்பது சிறந்தது எனவும், இது அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொறுந்தும் எனவும் தெரிவித்த அவர், இந்தியா கூட்டணிக்கு சாதகமாக 5 மாநில தேர்தல் முடிவு வரும் எனவும் தெரிவித்தார். பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் இப்போது இந்தியா கூட்டணியில் நடக்கவில்லை எனவும், பிரதமர் வேட்பாளர்  குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Embed widget