மேலும் அறிய

Savukku Sankar : 'என்னை பார்த்து திமுக அரசு அஞ்சுகிறது' - நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்

என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால் தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக காவலில் எடுத்து மூன்றுநாள் விசாரிக்க பந்தய சாலை காவல் துறையினர் கோவை குற்றவியல் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக கோவை நீதிமன்றம் அழைத்து வரபட்டார்.

அப்போது என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால் தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசியபடி சவுக்கு சங்கர் சென்றார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள். காவல் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் இருந்து  விசாரணைக்கு ஒத்துழைப்பு என தருவோம் கூறியிருந்தோம்.

Savukku Sankar : 'என்னை பார்த்து திமுக அரசு அஞ்சுகிறது' - நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சவுக்கு சங்கர்

சங்கர் தைரியமாக இருக்கிறார்

தேவர் பற்றி தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. சங்கர் பேட்டியில் பொது அமைதிக்கு எந்த குந்தமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுரைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது. அந்த வீடியோ வைத்து 17 வழக்குகள் போட்டார்கள். எங்கே வெளியில் வந்துவிடுவோரோ என அனைத்து வழக்குகளிலும் அவசரமாக கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதனால் அவசரமாக கைது செய்துள்ளார்கள். காவல்துறைக்கு புரிகின்ற பாஷையில் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றம் இவர்களுக்கு பதில் கூறும். காவல்துறையினர் தவறை தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா?

எந்த பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக கூறினார்களோ, அதை பெண் போலீஸ்காரர்களை வைத்து தண்ணீர் குடிக்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு அவர்களை சவுக்கு சங்கர் உடன் அனுப்புகிறார்கள். சங்கர் தைரியமாக இருக்கிறார். போலீசார் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். போலீசார் எங்களை காப்பாற்றுங்கள் என எங்களிடம் கேட்கும் நிலைமையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். பேரறிவாளன் தாய் அற்புதம்மாளை போல  தற்போது கமலா அம்மா சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். திரும்பவும் இந்த அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் ஒரு விஷயத்தை கூறுகிறோம். நீங்கள் போடும் வழக்கு தூக்கு தண்டனை பெரும் வழக்கல்ல. ஐந்து வருடம் தண்டனை கிடைத்தாலும் திரும்பவும் வந்து சங்கர் பேசத்தானே போகிறார்கள். தண்டனை பெற்றவுடன் திரும்பவும் வந்து அவர் பேசத்தான் போகிறார் அப்போது என்ன கொன்று விடுவார்களா? எத்தனை நாட்கள் உள்ளே வைத்திருக்க முடியும்? சங்கரை மிரட்டலாம் என நினைத்தால் அது நடக்காது. எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும் அவர் பேசுவார்” எனத் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
"தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசு" இறங்கி அடித்த விஜய்.. 2026ஐ குறிவைக்கும் தவெக!
IND Vs NZ:  வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
IND Vs NZ: வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
Embed widget