மேலும் அறிய

"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...

அமைச்சரையே மிரட்டுகிறார்கள் என்றால் சட்டம்-ஒழுங்கு மோசம்; தமிழக அரசை விமர்சித்த செந்தில் பாலாஜி.

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

புதிதாக திறக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகம் மக்கள் குறைகளை பெற்று தீர்வு காணும் மையமாக செயல்படும் என்றும், இனி ஒவ்வொரு வார்டாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது மற்றும் அமைச்சர் மிரட்டப்படுவதாக கூறிய விவகாரம் குறித்து பேசிய அவர், “ஒரு அமைச்சரையே மிரட்டக்கூடிய நிலை இருந்தால், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் சாதாரண மக்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கும்?” என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், இதுவரை மின்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் முழுமையான ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் மின் விநியோகம் தடையின்றி நடைபெற்றதாகவும், தற்போது நிர்வாகத்தில் தெளிவும் திறமையும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், மின்சாரத் துறை டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், துறை சார்ந்த அமைச்சர்கள் முழுமையான ஆய்வின்றி அரைகுறை நிர்வாகம் நடத்துவதாகவும் விமர்சித்தார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் கருத்துக்கு பதிலளித்த அவர், தேர்தல் வாக்குறுதிகளுக்கு கால அவகாசம் வழங்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அவகாசம் கேட்க முடியாது என்றார். தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சி “ரீல்ஸ் ஆட்சி” போன்று செயல்படுவதாகவும், திமுக எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் தொடர்ந்து எழுப்பும் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
Embed widget