மேலும் அறிய

'காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?' - செல்வப்பெருந்தகை

"பாமக, நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா?"

கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்றார். அப்போது தொண்டர்களிடையே அவர் பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் சிறப்புமிக்க தலைவர்களை பெற்று இருக்கிறோம். தேர்தல் கூட்டணி என்பது வேறு; இயக்கத்தை வலிமைப்படுத்துவது என்பது வேறு, இப்போதைய சூழலில் ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் கூட வாட்ஸ்அப் டிபியில் ராகுல் காந்தியின் படத்தை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் முதன்மை கட்சியாக மாற்றுவதற்கு ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும்” என பேசினார்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "காங்கிரஸ் பேரியக்கத்தை வலிமைப்படுத்துவதற்கான நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். சிறிய கட்சிகளான நாம் தமிழர், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் போது, காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதற்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. எங்களுடைய கட்டமைப்பு வலிமை பெற்றால் தோழமைக் கட்சிகளின் கட்டமைப்பும் வலிமை பெறும். இது எங்களது ஜீவாதார உரிமை என்பதால், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். திமுகவுடன் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். திமுகவை விமர்சிக்கும் கட்சிகளை முதலில் எதிர்ப்பது காங்கிரஸ் தான். தோழமை என்பது வேறு, எங்களது கட்டமைப்பை வலிமைப்படுத்துவது என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது எங்களது வழித்தோன்றல்களின் ஆசை, அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்" என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget