மேலும் அறிய

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை: சிசிடிவியால் சிக்கிய காவலாளி

சிசிடிவி கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் அப்பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் 'ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், கோவை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக 'அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்' நடத்தி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வரும் இம்மையத்தில் 100 படுக்கை வசதிகள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 26 பெண்கள் உட்பட 49 பேர் இந்த மையத்தில் தங்கியுள்ளனர். சுமார் 14 ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

அந்த மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த 7 மாதங்களாக தங்கியிருந்தார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல் நிலையை அடிக்கடி கண்காணிக்கும் மையத்தின் பணியாளர் செவிலியர், அப்பெண்ணின் வயிறு வீங்கி வருவதை கவனித்துள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அப்பெண்ணை அழைத்துச் சென்றார். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் அம்மையத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த மையத்தின் ஊழியர்கள் விசாரித்த போது, அங்கு பணியாற்றிய கவலாளி லட்சுமணன் என்பவர் அப்பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மையத்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அம்மையத்தின் நிர்வாகிகள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து லட்சுமணனை (வயது 39) கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சிகையலங்கார நிபுணர் மற்றும் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சமீபத்தில் அங்கிருந்து விலகி ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் நாய்கள் காப்பகத்தில் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அம்மையத்தில் பணிபுரிந்த போது ​​சிசிடிவி கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் அப்பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட லட்சுமணன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget