மேலும் அறிய

கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்; நோயாளிகளின் உறவினர்கள் சாலை மறியல்

ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 வயால் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் என்ற தகவலின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த  8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டன. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்பட்டது.

ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வந்தது. காலை 10 மணிக்கு மருந்து விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாலை 6 மணி முதல் பொதுமக்கள் மருந்து வாங்க குவிந்து வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர். இதனிடையே கடந்த 10 ம் தேதி அன்று ஒரே நாளில் 15 ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டதால், அவசர தேவைகளுக்காக வாங்க வந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 வயால் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

இதனிடையே ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இன்று முதல் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனையறியாது நேற்று டோக்கன் பெற்ற பலர் இன்று, ரெம்டெசிவிர் வாங்க வந்தனர். ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டு இருந்ததை அறிந்து ஏமாற்றமடைந்தனர். மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு ரெம்டெசிவிர் வழங்க கோரி, அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து ரெம்டெசிவிர் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “கடந்த வாரம் முழுவதும் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கினர். இதனால் மருந்து வாங்க முடியாமல் திரும்பிச் சென்றோம். நேற்று மீண்டும் டோக்கன் வழங்கப்பட்டதால், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கினோம். 18 ம் தேதி வரை டோக்கன் வழங்கிய நிலையில், இன்றே ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கும் மருந்து தர மறுக்கின்றனர். இம்மருந்து வாங்க வந்ததால் அலைச்சலும், மன உளைச்சலும் தான் மிச்சம். இதனை முன்கூட்டியே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது” எனத் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம்

இதையடுத்து பீளமேடு காவல் துறையினர் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனைகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என சமரசப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget