மேலும் அறிய

கோவையில் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய காவலர் கைது! தற்காலிக பணியிடை நீக்கம்!

மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவலர் சதீஸ் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும், அதனை தட்டிக் கேட்டதால் தன்னை போக்குவரத்து காவலர் சதீஸ் தாக்கியதாகவும் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட தனக்கு நீதி வேண்டும் எனவும், தன்னை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மோகனசுந்தரம் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து மோகன சுந்தரம் கூறுகையில், ”கோவை - அவிநாசி சாலையில்  உள்ள ஃபன் மால் சிக்னல் பகுதியில் நேசனல் மாடல் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை நான் வழிமறித்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டேன். அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், ’இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்?’ என கேட்டு என்னை தாக்கினார்.  

கோவையில் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய காவலர் கைது! தற்காலிக பணியிடை நீக்கம்!

அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என கேட்டு பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு, சிறிது நேரம் கழித்து என்னை அனுப்பினார். அந்த பெண் இது குறித்து கேட்ட போது போக்குவரத்து காவலர் அப்பெண்ணையும் நீங்கள் செல்லும் படி அனுப்பிவிட்டார். தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல். இதுபோன்ற தவறு இழைத்தவர்களை விட்டு விட்டு தட்டி கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையல்ல. இதற்கு ஒரு நியாயம் வேண்டும். என்னை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். உணவு டெலிவரி ஊழியரை காவலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவலர் சதீஸ் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டு, தற்காலில பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget