மேலும் அறிய

கோவைக்கு வரும் பிரதமர்... உச்சகட்ட பாதுகாப்பில் மாநகரம்

கோவை மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல்.18) மாலை கோவை வர உள்ளார். இதையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்ற உள்ளார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்ட மேடையை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் கண்ணன், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை காவல் ஆணையாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், பொதுமக்கள் நுழைவு மற்றும் வெளியேற்றம், அவசர கால மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவையில் தினமும் 1,200 டன் குப்பைகள் எரிக்கத் திட்டம்! ரூ.450 கோடி திட்டத்தால் ஆபத்தா? அன்புமணி எதிர்ப்பு!
கோவையில் தினமும் 1,200 டன் குப்பைகள் எரிக்கத் திட்டம்! ரூ.450 கோடி திட்டத்தால் ஆபத்தா? அன்புமணி எதிர்ப்பு!
coimbatore power cut: கோவையில் நவம்பர் 23ஆம் தேதி எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நவம்பர் 23ஆம் தேதி எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (21-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
Embed widget