மேலும் அறிய

Coimbatore Book Festival: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா துவக்கம்; உற்சாகத்துடன் பங்கேற்ற மக்கள்

இந்த புத்தகத் திருவிழா 28ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு எட்டாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. கோவை கொடிசியா அரங்கத்தில் இந்த புத்தகத் திருவிழா இன்று துவங்கியது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர். இந்த புத்தகத் திருவிழா 28ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 280க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. கோவை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்கள் புதிய புத்தகங்களை வெளிட்டுள்ளன. அதிகபட்சமாக எதிர் வெளியீடு 28 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது. நாவல், சிறுகதை, கட்டுரைகள், சிறார் கதைகள், வரலாறு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Coimbatore Book Festival: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா துவக்கம்; உற்சாகத்துடன் பங்கேற்ற மக்கள்

2 கோடிக்கு விற்பனை

கோவை புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர்களுக்கான விருதில் கவிதை நூலுக்காக இரா.பூபாலனுக்கும், புனைவு நூலுக்கு நா.கோகிலன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முதல் நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். வார இறுதி நாட்களில் அதிக அளவிலான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவினை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாள் தோறும் கருத்தரங்கம், கவியரங்கம், பேச்சுப்போட்டி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கோவை புத்தகத் திருவிழாவில் கடந்த ஆண்டு 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றதாகவும், அதே போன்று இந்த ஆண்டும் விற்பனை நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த முறை புத்தகங்கள் நன்கொடை மூலம் 2000 புத்தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டதாகவும்,அதே போன்று இந்த ஆண்டும் புத்தக நன்கொடை நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தார். பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த புத்தகத் திருவிழாவில் அனைத்து வயதினர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற உள்ளதாகவும் கூறிய அவர்கள், இந்தப் புத்தகத் திருவிழாவில் அதிக அளவிலான மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget