மேலும் அறிய

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு மாற்றாக புதிதாக ஒரு இடத்திற்கு சென்று புதிய அனுபவங்களை பெற நினைக்கிறார்களா, உங்களுக்காவே காத்திருக்கிறது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்.

பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக டாப்சிலிப் கடந்து தான் இப்பகுதிக்கு செல்ல முடியும். பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை சாலையில் இருபுறமும் அடர்ந்து வளர்ந்து, குடை போல சாலையை மூடியிருக்கும் நிழல் பரப்பி இருக்கும் புளியமரங்களுக்கு இடையே பயணித்தால் ஆனைமலை மலைத்தொடர்கள் வரவேற்கும். சேத்துமடை தாண்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக வளைந்து நெளிந்து செல்லும் சாலை டாப்சிலிப்பிற்கு அழைத்துச் செல்லும். இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. நான்கு சக்கர வாகனம் அல்லது பேருந்தில் தான் செல்ல முடியும்.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

தமிழ்நாடு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலும் சுற்றுலா செல்லலாம். காடுகளுக்குள் சவாரி, யானை சவாரி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு நேரம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், நேரடியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சென்று விடலாம். வனத்துறை சோதனைச் சாவடியில் ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். வாகனத்திற்கு 80 ரூபாய் வசூலிக்கப்படும். டிக்கெட் வாங்கிக் கொண்டு 2 கி.மீ. தூரம் சென்றால் யானைப்பாடி என்ற இடம் வரும். அங்கு சவாரி மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

பரம்பிக்குளம் அணை

பரம்பிக்குளம் சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இடமாகவும் உள்ளது. ஆசியாவின் பொறொயியல் அதிசயம் என புகழப்படும் பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் உயிர் நாடியான பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 3 அணைகள் இப்பகுதியில் உள்ளன. இந்த அணைகள் தான் மேற்கு மண்டல விவசாயிகளின் வாழ்வாதரமாக இருந்து வருகிறது. காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகள், கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும் தமிழ்நாடு அரசே பராமரித்து வருகிறது.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

பரம்பிக்குளம் அணை பார்க்க மற்ற அணைகளை போல இருந்தாலும், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிஏபி திட்ட அணைகளில் அதிக கொள்ளளவு கொண்ட அணை பரம்பிக்குளம் அணை. இது தமிழக அரசு கட்டிய மூன்றாவது பெரிய அணையாகும். சோலையாறு அணையில் தேங்கும் நீர் பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறது. பரம்பிக்குளம் சுற்றுவட்டார வனப்பகுதியில் 6 செட்டில்மெண்டுகளில் காடர், மலைமலசர், மலசர், முதுவர் ஆகிய 4 வகையான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். அப்பழங்குடிகளே சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர்.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

காடுகளுக்குள் சவாரி

யானைப்பாடியில் சவாரி செல்வதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வனத்துறை வாகனத்தில் 3 மணி நேரத்தில் மொத்தம் 54 கி.மீ. தூரம் காடுகளுக்குள் பயணம். 5 இடங்களுக்கு தான் அழைத்துச் செல்கின்றனர். என்றாலும் வழியெங்கும் கூட்டம் கூட்டமாக மான்களும், காட்டு மாடுகளும் காட்சி தரும். அவ்வப்போது யானைகளை சந்திக்க முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் பார்க்க வாய்ப்புள்ள வனப்பகுதி அற்புதமான அனுபவங்களை தரக்கூடியது.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

வனத்துறை வாகனம் ஆட்களை ஏற்றிக் கொண்டு மூங்கில்களும், தேக்கு மரங்களும் நிறைந்த வனச்சாலையில் பயணித்து, தூணக்கடவு அணை முன்பாக நின்றது. மலையடிவாரத்தில் நிறைந்து கிடக்கும் அணை முன்பாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதில் சுவராஜ்ஜியமாக விஷயம் என்னவெனில், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் இரண்டு அணைகளும் இரட்டை அணைகள். ஒரு அணையில் நீர் அதிகரித்தால், மற்றொரு அணையிலும் அதே அளவு நீர் அதிகரிக்கும். நீர் குறைந்தாலும், அதே அளவு மற்றொரு அணையிலும் குறையும். அடுத்து தூணக்கடவு அணை காட்சி முனை பார்த்தபடி சென்றால், பரம்பிக்குளம் வரும். அங்கு உணவகங்கள் உள்ளன. மீன் குழம்பு சுவைக்கவே வரும் பலர் உண்டு.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

கன்னிமாரா தேக்கு

அடுத்ததாக தேக்கு காடுகளின் ஊடாக கன்னிமாரா தேக்கை பார்க்க அழைத்துச் செல்கின்றனர். பின்னந்தலை முதுகில் படுமளவிற்கு சாய்த்து பார்த்த போது தான், மரத்தின் கிளைகள் கண்ணில் படும். தண்டு பகுதிகளில் கிளைகள் இல்லாமல் உச்சியில் மட்டும் கிளைகள் விரிந்து, அடர்ந்த இலைகளுடன் ஒரு குடை போல விரிந்திருந்தது. 465 ஆண்டுகள் பழமையான இந்த தேக்கு மரம், உலகத்தில் வாழும் அதிக வயதான தேக்கு மரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் இதோ..!

இந்த மரத்தை உள்ளூர் பழங்குடிகள் வெட்ட முயன்ற போது, வெட்டப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்ததாம். அதனால் பயந்து போன பழங்குடிகள் இம்மரத்தை வணங்கி வருகின்றார்களாம். பார்க்கவும், அதுப்பற்றி கேட்கவும் கன்னிமாரா தேக்கு ஆச்சரியம் ஏற்படுத்துவதாக இருக்கும். இதுமட்டுமின்றி கட்டணத்திற்கு ஏற்ப தங்கும் விடுதிகளும் உள்ளது. அணையை ஒட்டிய பகுதிகளில் மர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மர வீடு, மூங்கில் படகு பயணம், தீவின் நடுவே தங்குமிடம் என புது அனுபவங்களை பரம்பிக்குளம் தரும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget