மேலும் அறிய

Ooty Mountain Train: குன்னூர் அருகே தடம் புரண்ட ஊட்டி மலை ரயில் - பயணிகள் அதிர்ச்சி

சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 174 பேர் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் மலை இரயிலின் நான்காவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மலை இரயில் மேட்டுப்பாளையம் நோக்கி 4 பெட்டிகளுடன் இன்று மாலை  புறப்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 174 பேர் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.  ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் மலை இரயிலின் நான்காவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது. இதில் பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கியதால், நான்காவது பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அதேசமயம் நல்வாய்ப்பாக அசாம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட 174 பயணிகளும், பேருந்து முலம் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இரயில் பெட்டியினை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டியினை சரி செய்த பின்னர் மலை இரயில் சேவை துவங்கும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலை இரயில் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ooty Mountain Train: குன்னூர் அருகே தடம் புரண்ட ஊட்டி மலை ரயில் - பயணிகள் அதிர்ச்சி

தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில் தான். இந்த இரயில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான மலை இரயில் 123 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் என இனிமையான பயணத்தை இந்த இரயில் பயணிகளுக்கு தரும். இதன் காரணமாக இந்த மலை இரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே, பல் சக்கரம் உதவியுடன் மலைப் பாதையில் நீலகிரி மலை இரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்க, ‘பிரேக்’ பிடித்து இயக்கப்படுகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயில், 12 மணிக்கு ஊட்டி இரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதனால் நீலகிரி மலை இரயில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரியதாக இருந்து வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLANDMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
New Year Rasi Palan Meenam: கவலையே வேண்டாம்! 2025 மீனத்துக்கு சக்ஸஸ்தான் - முழு ஆண்டு ராசிபலன்
New Year Rasi Palan Meenam: கவலையே வேண்டாம்! 2025 மீனத்துக்கு சக்ஸஸ்தான் - முழு ஆண்டு ராசிபலன்
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Embed widget