மேலும் அறிய

‘10 ஆண்டு செய்யாததை 6 மாதத்தில் செய்து முடித்த முதல்வர்’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

”கடந்த காலங்களில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாததால், பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல், கடந்த ஆட்சியில் செய்யாத பணிகளை 6 மாதத்தில் முதல்வர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.”

கோவை மாவட்டம் முழுவதும் பொது மக்களை சந்தித்து தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்  பாலாஜி மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் சரவணம்பட்டி 28 வது வார்டு விமல் ஜோதி பள்ளியில் இன்று மக்கள் சபை நிகழ்ச்சி துவங்கியது. இதனைத் தொடர்ந்து  எஸ்.ஆர்.பி நகர், பூந்தோட்டம் நகர், கணபதி, மணியகாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு உள்ளிட்ட ஒரே நாளில் 10 வார்டுகளில் தனி தனியாக மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றார்.

‘10 ஆண்டு செய்யாததை 6 மாதத்தில் செய்து முடித்த முதல்வர்’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

முன்னதாக செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது  44 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 27374 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. இன்று  10 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி  நடைபெற்று  வருகின்றது. முதல்வர்  மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில்,  சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

‘10 ஆண்டு செய்யாததை 6 மாதத்தில் செய்து முடித்த முதல்வர்’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

வெள்ள பாதிப்புகள் தொடர்பான எதிர்கட்சிகள் குற்றாச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, ”கடந்த மே 7 ந்தேதி முதல்வர்  பொறுப்பேற்றார். அப்போது கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்தது. அதை எதிர்கொண்டு, தமிழகத்தை 2 மாதத்தில் மீண்டெடுத்தார் தமிழக  முதல்வர். கடந்த காலங்களில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாததால், பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல், கடந்த ஆட்சியில் செய்யாத பணிகளை 6 மாதத்தில் முதல்வர் செய்து விடுவார்  என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கடந்த கால ஆட்சியில், போடப்பட்ட துணை மின் நிலையங்கள், தாழ்வான இடங்களில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது” என அவர் பதிலளித்தார். இந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget