மேலும் அறிய

'அதிமுகவினரின் எஜமானர் பாஜக, பாஜக சொல்வதைத் தான் அதிமுக செய்யும்’ - அமைச்சர் செந்தில்பாலாஜி

"அதிமுகவினரின் எஜமானர் பா.ஜ.க. தான், பாஜக சொல்வதைத் தான் அதிமுக செய்யும். சுயமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு இல்லை. " - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆகிய நிர்வாகிகளுடன்   ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ”கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 12,13,14  தேதிகளில் திராவிட பயிலரங்கம்  நடைபெறுகின்றது. ஒவ்வொரு பயிலரங்கிற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழைத்து வர நிர்வாகிகளை அறிவுறுத்தி இருக்கிறோம். கோவை மாவட்ட திமுகவிற்கு புதிய கட்சி அலுவலகம் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. அவினாசி சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டிடம் வடிவமைப்பு பணிகள் நடைபெறுகின்றது. மிக விரைவில் அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. திமுக இளைஞரணிச் செயலாளர் தலைமையில் அடிக்கல் விழா  நடைபெற உள்ளது.

அதிமுகவினரின் எஜமானர் பாஜக, பாஜக சொல்வதைத் தான் அதிமுக செய்யும்’ - அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை மாவட்டத்திற்கு வரும் 23 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். 24 ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை பொள்ளாச்சியில்  மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெறும். இதில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள், புதிய உறுப்பினர்கள் என 50 ஆயிரம் பேர் இணைய இருக்கின்றனர். அன்றைய தினம் முக்கிய நபர்கள் யார் இணைகின்றனர் என்பதை 24 ம் தேதி மேடையில் பாருங்கள். 

ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தால் 100 யூனிட் இலவச மின்சரம், விவசாயிகள், விசைத்தறி, குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த சட்டத்தை  வாபஸ் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும். தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக  ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை சொல்லி இருக்கின்றார். 2012,2013,2014 என தொடர்ந்து மின் கட்டணம் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதிமுகவினரின் எஜமானர் பா.ஜ.க. தான், பாஜக சொல்வதைத் தான் அதிமுக செய்யும். சுயமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு இல்லை. 

அதிமுகவினரின் எஜமானர் பாஜக, பாஜக சொல்வதைத் தான் அதிமுக செய்யும்’ - அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது தொடர்பாக கோவை கொடிசியா தலைமையில் தொழில் அமைப்பினர் மனு அளித்து இருக்கின்றனர். நடைபெற இருக்கும் கருத்து கேட்பு கூட்டங்களில் அவர்களது கருத்துகளை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்கின்றது. அவர்களின் கோரிக்கை மனுவை நானும் பார்க்கிறேன். கோவையை பொறுத்த வரை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள 3041 பூத் வாரியாக பணிகளை துவங்கி இருக்கின்றோம். கோவை மாவட்டத்தில் உள்ள 31 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் வாக்காளர்கள் திமுகவினர் என்ற நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றோம். ரஜினி - ஆளுநர் சந்திப்பு அவர்கள் இருவருக்கு இடையில் நடந்தது. அது தொடர்பாக எதுவும் தெரியாமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது” என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget